Henna Egg Pack:
மறுநாள் காலை இந்த பேக்கை(Henna Egg Pack) தலையில் போட வேண்டும் என்றால்,முந்தைய நாள் இரவே பேக்கை தயார் செய்து வைத்து விட வேண்டும்.ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு பெரிய சொம்பு அளவு தண்ணீரை ஊற்றி காபித்தூள்(Cofee Powder) 1 ஸ்பூன்,டீ தூள்(Tea Powder) 1 ஸ்பூன், கருவேப்பிலை(Curry Leaves) பொடியாக நறுக்கி 1 ஒரு கைப்பிடி போட்டு இந்த தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.தண்ணீர் கொதி வந்து, தண்ணீரின் நிறம் மாறியதும் வடிகட்டி அந்த டிகாஷன் தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து இரும்பு கடாயை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் தேவையான அளவு ஹென்னா பவுடரை(Henna Powder) போட்டு, அந்த ஹென்னா பவுடருக்கு தேவையான அளவு நம் தயார் செய்து வைத்திருக்கும் டிகாஷன் தண்ணீரை ஊற்றி,கட்டிகள் இல்லாமல் கலந்து மூடி வைக்க வேண்டும்.
மறுநாள் காலை பார்க்கும் போது,இந்த இரும்பு கடாயில் நாம் கலந்து வைத்திருக்கும் ஹென்னா கருப்பு நிறத்தில் வந்திருக்கும்.இந்த ஹென்னாவோடு இரண்டு முட்டைகளை(Eggs) உடைத்து ஊற்றி,அடித்து கலக்கி இந்த பேக்கை தலையில் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.முந்தைய நாள் இரவே உங்களுடைய தலையில் நன்றாக தேங்காய் எண்ணெயை(Coconut Oil) வைத்து மசாஜ் செய்து விடுங்கள். ஆயில் உள்ள முடியில் தான் இந்த பேக்கை அப்ளை செய்ய வேண்டும்.இல்லை என்றால் முடி டிரை(Dry) ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது.எண்ணெயாக இருக்கும் முடியில் மேல் பகுதியில் இருந்து நுனிப்பகுதி வரை,எல்லா இடங்களிலும் நன்றாக படும்படி இந்த பேக்கை போட்டுவிட்டு அப்படியே கொண்டைக்கட்டி மேலே ஒரு கவர் போட்டுக்கோங்க.ஒரு மணி நேரம் பேக் அப்படியே தலையில் இருக்க வேண்டும்.அதன் பிறகு மைல்டான ஷாம்பு(mild shampoo) அல்லது சீயக்காய்( Shikakai) போட்டு தலையை அலசி விடுங்கள்.சூப்பரான முடி உங்களுக்கு கிடைத்துவிடும்.மாதத்தில் ஒரு நாள் இந்த பேக்கை போட்டாலே போதும்.முடிக்கு(Hair) தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் இருக்கும்.
I have read some excellent stuff here. Definitely value bookmarking for revisiting. I wonder how much effort you put to make the sort of excellent informative website.
I was very pleased to uncover this web site. I want to to thank you for your time due to this fantastic read!! I definitely appreciated every bit of it and I have you bookmarked to look at new things on your website.