சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கில்(Sweet Potato) நார்ச்சத்து, புரதம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், செலினியம், பொட்டாசியம், விட்டமின்கள், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் உள்ளன. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் மஞ்சள், ஆரஞ்சு, ஊதா, வெள்ளை போன்ற நிறங்கள் உள்ளன. சர்க்கரைவள்ளி கிழங்கு இனிப்பு உருளைக்கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது.
சர்க்கரைவள்ளிக் கிழங்கின் பயன்கள்
சர்க்கரைவள்ளிக் கிழங்கின் பயன்கள் பற்றி பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
சர்க்கரைவள்ளி கிழங்கு(Sweet Potato) விட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இதில் விட்டமின் சி அதிகளவில் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு குளிர்காலத்திற்கு ஏற்ற உணவு ஆகும். சர்க்கரைவள்ளி கிழங்கு குளிர்காலத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவும்.
நீரிழிவு நோய்க்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு, உயர் ரத்த சர்க்கரை நோய்க்கு இந்த கிழங்கு ஒரு சிறந்த மருந்தாகும். வெள்ளை சர்க்கரை வள்ளி கிழங்கு சர்க்கரை நோய்க்கு சிறந்த பலனை தருவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
புற்றுநோய்
ஊதா நிற சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள அந்தோசயனின் தான் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் நிறத்திற்கு காரணம். சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள அந்தோசயனின் மார்பக புற்றுநோய், இரைப்பை புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்க பெரிதும் உதவும். புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்க சர்க்கரைவள்ளிக் கிழங்கு பெரிதும் உதவும்.
இதயநோய் வராமல் தடுக்க
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள நார்ச்சத்து மற்றும் அந்தோசயின்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க பெரிதும் உதவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள பொட்டாசியம் இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க பெரிதும் பயன்படும்.
இளமையுடன் இருக்க
சர்க்கரைவள்ளி கிழங்கில் விட்டமின் சி, விட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை சருமம் வயதான தோற்றத்தை அடையாமல் பாதுகாக்க பெரிதும் உதவும்.
எலும்புகளை பலப்படுத்த
சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள விட்டமின் டி எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவும். விட்டமின் டி எலும்புகள், நரம்புகள்,பற்கள் போன்றவற்றை பலப்படுத்த பெரிதும் பயன்படும்.