நட்சத்திர பழம்(Star Fruit) இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் காணப்படும். இந்த பழம் பார்ப்பதற்கு நட்சத்திர வடிவில் இருக்கும். இந்த பழத்தை அப்படியே தோலுடன் சாப்பிடலாம். இனிப்பு சுவையுடைய பழம் கோடை காலம் மற்றும் குளிர் காலங்களில் கிடைக்கும். புளிப்பு சுவையுடைய பழம் கோடை கால முடிவில் தொடங்கி குளிர்காலம் வரை கிடைக்கும். இந்த பழம் நட்சத்திர வடிவில் இருப்பதால் நட்சத்திர பழம்(Star Fruit) என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இந்த பழம் விளைவிக்கப்படுகிறது. நட்சத்திரப் பழத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
Table of Contents
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
இந்த பழத்தில் விட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பெரிதும் உதவும். மேலும் இந்த பழம் இருமல், தொண்டைப்புண், காய்ச்சல், அல்சர் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.
சருமம் மற்றும் கூந்தல்
இந்த பழம் சருமம் வயதாவதை தடுத்து என்றும் இளமையுடன் இருக்க பெரிதும் உதவும். மேலும் முடி வளர்ச்சியை தூண்டவும் இந்த பழம் உதவும்.
இதயத்தை பாதுகாக்க
இந்த பழத்தில் சோடியம் மற்றும் பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவும். இதனால் இதய நோய் வராமல் தடுக்கப்படுகிறது.
சரும பிரச்சனைகள் வராமல் தடுக்க
இந்த பழத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இதன் காரணமாக இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் சருமப் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
உடல் எடையை குறைக்க
இந்த பழம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும். இதன் காரணமாக உடல் எடை குறைக்க இந்த பழம் பெரிதும் உதவும்.
வயிற்று பிரச்சினைகள் நீங்க
இந்த பழம் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், மலச்சிக்கல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
நீரிழிவு நோய்
இந்த பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்க முடியும். இதன் காரணமாக நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.