தினமும் ஒவ்வொரு வகை கீரையை(Spinach) நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு தேவையான எல்லா விட்டமின்களும் தாதுக்களும் கிடைக்கும்.அதே நேரத்தில் கீரைகளில் அதிக நார்ச்சத்து இருக்கிறது.செரிமானமாக நேரம் அதிகமாகும்,அதனால் இரவில் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.கீரை(Spinach) சாப்பிட்டதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
முருங்கைக்கீரை
முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து,கால்சியம்,நார்ச்சத்து,விட்டமின் சி ,பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன.பொட்டாசியம் மெக்னீசியம்,குரோமியம்,தாமிரம் மற்றும் துத்தநாகம் போன்றவையும் உள்ளன.முருங்கைக்கீரை கண்களுக்கு மிகவும் நல்லது.மாலைக்கண் நோயாளிகள் முருங்கைகீரை சாப்பிட்டு வந்தால் நோய் சரியாகும். முருங்கைக்கீரை ரத்த சோகையை போக்க உதவுகிறது.எலும்பு வளர்ச்சிக்கு முருங்கைக்கீரை பெரிதும் உதவும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முருங்கைக்கீரை உதவுகிறது.முருங்கைக்கீரை இரைப்பை புண்ணை ஆற்ற உதவும்.முருங்கைக்கீரையில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்க உதவும்.முருங்கைக்கீரை இதய நோயாளிகளுக்கு உகந்தது.
அரைக்கீரை
அரைக்கீரையில் கால்சியம்,விட்டமின் சி ஆகியவை அதிக அளவில் உள்ளது.பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்து போன்றவையும் அடங்கியுள்ளன.இரும்புச்சத்து மிக அதிக அளவில் அரைக்கீரையில் உள்ளது.ரத்தம் குறைவாக இருப்பவர்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் அரைக்கீரை சிறந்தது.புரதம் மற்றும் கலோரிகள் குறைந்த அளவில் காணப்படுவதால் இதய நோயாளிகள் சர்க்கரை நோயாளிகள் ஆகியோர் அரைக்கீரையை சாப்பிடுவது நல்லது. அரைக்கீரை செரிமானத்துக்கு உதவுகிறது.
பொன்னாங்கண்ணிக் கீரை
பொன்னாங்கண்ணிக் கீரையில் இரும்புச்சத்து,பாஸ்பரஸ்,கால்சியம், விட்டமின்கள்,விட்டமின் ஏ,விட்டமின் சி,விட்டமின் பி காம்ப்ளக்ஸ், நார்ச்சத்து போன்றவை அடங்கியுள்ளது.தாமிரம்,சல்பர்,மெக்னீசியம், மாங்கனீஸ் போன்ற தாதுக்களும் பொன்னாங்கண்ணிக் கீரையில் உள்ளது. பொன்னாங்கண்ணிக் கீரை கண் பார்வைக்கு மிகவும் நல்லது. மலச்சிக்கலைப் போக்கவும் பொன்னாங்கண்ணிக் கீரை உதவும்.
வெந்தயக்கீரை
வெந்தயக்கீரையில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் மிக அதிக அளவில் இருக்கிறது.வெந்தயக்கீரையில் நார்ச்சத்தும் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளன.அதிக அளவில் கரோட்டின் வெந்தயக்கீரையில் காணப்படுகிறது.தாமிரம்,துத்தநாகம்,மெக்னீசியம்,மாங்கனீசு போன்றவையும் வெந்தயக்கீரையில் உள்ளன.பொட்டாசியம் சத்தும் வெந்தயக்கீரையில் உள்ளது.வெந்தயக்கீரை பசியைத் தூண்டி செரிமானத்தை அதிகரிக்க உதவும்.இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கு வெந்தயக்கீரை தீர்வளிக்கும். பார்வைக் கோளாறுகளைச் சரி செய்யவும் வெந்தயக்கீரை உதவும். வெந்தயக்கீரை மூளை நரம்புகளை பாதுகாக்கவும் உதவும்.
சிறுநீரக நோயாளிகளுக்கு உகந்த கீரை வெந்தயக்கீரை.
அகத்திக்கீரை
அகத்திக் கீரையில் கால்சியம் அதிக அளவில் காணப்படுகிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுவதால் வளரும் பருவத்தில் உள்ளவர்களுக்கு ஏற்ற கீரை அகத்திக்கீரை.கீரைகளில் அதிக அளவு ஆற்றல் தரும் கீரை அகத்திக்கீரை.மருத்துவ குணங்கள் அகத்திக் கீரையில் அதிக அளவில் உள்ளது.புரதமும் கார்போஹைட்ரேட்டும் அகத்திக் கீரையில் உள்ளது.அகத்திக் கீரையில் உள்ள பாஸ்பரஸ் பல் பிரச்சனையை சரிசெய்ய உதவும்.அகத்திக் கீரையில் விட்டமின் ஏ சத்தும் இரும்புச்சத்தும் உள்ளன.அகத்திக்கீரை கண்களுக்கு மிகவும் நல்லது. அகத்திக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் சரியாகும்.இரத்தசோகை உள்ளவர்களுக்கும் அகத்திக்கீரை சிறந்தது.
முளைக்கீரை
முளைக்கீரையில் கால்சியம்,இரும்புச்சத்து,நார்ச்சத்து போன்றவை அதிக அளவில் உள்ளது.சோடியம்,பொட்டாசியம்,பீட்டா கரோட்டின் ஆகியவையும் முளைக்கீரையில் உள்ளன.முளைக்கீரையில் கலோரிகள் மிகவும் குறைவு. இதுபோல் புரதமும் கார்போஹைட்ரேட்டும் முளைக்கீரையில் குறைந்த அளவில் காணப்படுகிறது.ஆக்சாலிக் அமிலம் முளைக்கீரையில் அதிக அளவில் உள்ளது.சிறுநீரக கல் தொல்லை உள்ளவர்களுக்கு முளைக்கீரை சாப்பிடுவது உகந்ததல்ல.
பசலைக்கீரை
பசலைக்கீரை கீரைகளின் அரசன் என்று அழைக்கப்படுகிறது.குறைந்த அளவில் இருந்தாலும் பல சத்துக்களை உள்ளடக்கிய கீரை பசலைக்கீரை. விட்டமின் ஏ,விட்டமின் சி,விட்டமின் பி காம்ப்ளக்ஸ்,கால்சியம்,பாஸ்பரஸ் சோடியம்,அமினோ அமிலம் என பல சத்துக்கள் நிறைந்த கீரை பசலைக்கீரை.பசலைக்கீரையை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு வாய்ப்புண் வராது.பசலைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரைப்பைபுண் வராது.பசலைக்கீரை உடலுக்கு வலிமை தருகிறது. நோய்த்தொற்றை தடுக்க பசலைக்கீரை பெரிதும் உதவும்.புற்றுநோயை தடுக்கும் குணமும் பசலைக் கீரைக்கு உண்டு.பசலைக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக சம்பந்தமான பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும்.பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்ற கீரை பசலைக்கீரை.
சிறுகீரை
சிறு கீரையில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது.கால்சியமும் சிறு கீரையில் காணப்படுகிறது.புரதம் மற்றும் கலோரிகள் குறைந்த அளவில் சிறு கீரையில் உள்ளது.பீட்டா கரோட்டின்,நார்ச்சத்து ஆகியவை சிறு கீரையில் அடங்கியுள்ளது.பாஸ்பரஸ் சத்து சிறு கீரையில் காணப்படுகிறது. பருப்புடன் சேர்த்து சிறுகீரை சமைத்தால் புரதச்சத்து அதிக அளவில் காணப்படும்.உடற்பருமன்,இதய நோயாளிகள்,சர்க்கரை நோயாளிகள்,முதியவர்கள் ஆகியோர் சாப்பிட ஏற்ற கீரை சிறுகீரை.
பாலக்கீரை(Palak)
பாலக் கீரையில் விட்டமின் ஏ சத்து அதிக அளவில் காணப்படுகிறது. பார்வை கோளாறுகள் உள்ளவர்களுக்கு பாலக்கீரை மிகவும் சிறந்தது. போலிக் அமிலமும் விட்டமின் சி சத்தும் அதிகமாக உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு பாலக்கீரை சிறந்த உணவு.பாலக்கீரை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.இரும்புச்சத்து,கால்சியம்,பாஸ்பரஸ் ஆகியவை பாலக் கீரையில் குறைந்த அளவில் காணப்படுகிறது.தயமின், ரிபோஃப்ளேவின்,நார்ச்சத்து போன்றவையும் பாலக் கீரையில் உள்ளது. குடல் அழற்சியை சரி செய்ய பாலக்கீரை உதவும்.பாலக் கீரையில் ஆக்சாலிக் அமிலம் அதிக அளவில் காணப்படுகிறது.சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் பாலக்கீரையை சாப்பிடக்கூடாது.மூட்டு வாத நோய் உள்ளவர்கள் பாலக்கீரையை சாப்பிடக்கூடாது.
புதினாக்கீரை(Mint)
புதினாக்கீரை செரிமானத்திற்கு மிகவும் உகந்தது.எல்லா வயதினருக்கும் ஏற்ற கீரை. புதினா சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு பசியைத் தூண்டி சாப்பிட வைக்கும்.விட்டமின் ஏ,விட்டமின் சி,ரிபோஃபிளேவின்,போலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் புதினாவில் உள்ளன.இரும்புச்சத்தும் நார்ச்சத்தும் புதினாவில் காணப்படுகிறது. மெக்னீசியம்,மாங்கனீசு,தாமிரம்,துத்தநாகம்,குரோமியம் போன்ற தாதுக்களும் புதினாவில் உள்ளது.ரத்த சோகையை போக்க புதினா உதவும். மலசிக்கலை சரி செய்யவும் புதினா உதவும்.புதினாவில் மென்தால் என்னும் வேதிப்பொருள் உள்ளது.இது சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய உதவும். மலச்சிக்கல் பிரச்சினையை சரி செய்யவும் புதினா உதவும்.
மணத்தக்காளி கீரை
மணத்தக்காளிக் கீரையில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிக அளவில் உள்ளது.மணத்தக்காளிக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண்ணும் இரைப்பை புண்ணும் சரியாகும்.மணத்தக்காளிக் கீரையில் புரதசத்து,நார்ச்சத்து,இரும்புச்சத்து,கால்சியம் போன்றவையும் உள்ளன.ரத்த சோகை உள்ளவர்களுக்கு மணத்தக்காளி கீரை சிறந்தது.
பருப்பு கீரை
பருப்புக் கீரையில் இரும்புச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. விட்டமின்களும் தாதுக்களும் பருப்புக் கீரையில் அதிக அளவில் உள்ளன. பருப்புடன் கீரையை சமைத்து சாப்பிடுவதால் இது பருப்புக்கீரை என்று பெயர் பெற்றது.ரத்தசோகையை சரி செய்ய பருப்புக்கீரை உதவும்.சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்ய பருப்புக்கீரை உதவும்.மூல நோய்க்கு பருப்புக்கீரை சிறந்த மருந்து.