Skip to content

Health Benefits Of Red Banana In Tamil

செவ்வாழை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

செவ்வாழைப்பழத்தில்(Red Banana) கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, விட்டமின் சி, போலிக் அமிலம், தையமின், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. செவ்வாழைப்பழம் ரத்த ஓட்டம், ரத்த உற்பத்தி, மூளையின் செயல்பாடு, சிறுநீரகத்தின் இயக்கம், இதயத்தின் செயல்பாடு, குடலின் இயக்கம், கல்லீரலின் செயல்பாடு ஆகியவற்றை பாதுகாக்க பெரிதும் உதவும்.

செவ்வாழை பழத்தின் பயன்கள்

1. பல் வலி போன்ற பல் சார்ந்த பிரச்சினைகளை செவ்வாழைப்பழம் சரிசெய்ய உதவும். பல் சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், பல் சார்ந்த பிரச்சினைகள் நீங்கி பற்கள் பலம் பெறும்.
2. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செவ்வாழைப்பழம் சிறந்த தீர்வளிக்கும். கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் செவ்வாழைப் பழத்தை(Red Banana) சாப்பிட்டு வந்தால், கண்பார்வை தெளிவடையும்.
3. மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்களுக்கு செவ்வாழைப்பழம் சிறந்த தீர்வளிக்கும். மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் காலையில் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டால், குடலியக்கத்தை தூண்டி கழிவுகளை வெளியேற்ற செய்யும்.
4. நரம்புத்தளர்ச்சி பிரச்சனை இருப்பவர்கள் செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டு வந்தால், நரம்புத்தளர்ச்சி பிரச்சினை சரியாகும்.
5. தோலில்வெடிப்பு, சொரி, சிரங்கு போன்ற சரும பிரச்சினைகளுக்கு செவ்வாழைப்பழம் சிறந்த தீர்வளிக்கும். செவ்வாழைப்பழத்தை பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமப் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *