Skip to content

Health Benefits Of Red Banana In Tamil

Health Benefits Of Red Banana In Tamil

செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

நாம் பழங்களில் அதிகம் சாப்பிட கூடிய பழம் வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகைகள் இருக்கு. இருந்தாலும் செவ்வாழைப் பழத்தில்(Red Banana) தான் அதிக சத்துக்கள் உள்ளது. இப்ப செவ்வாழைப்பழம் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க

நம் உடலில் ஹீமோகுளோபின் குறைந்தால் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். செவ்வாழையில்(Red Banana) உள்ள வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உடலில் இரத்தணுக்களின் அளவை சீராக பராமரிக்க பெரிதும் உதவும்.

கண்பார்வை பிரச்சனைக்கு

மாலைக்கண் நோய் பிரச்சினை உள்ளவர்கள், கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு செவ்வாழைப்பழம்(Red Banana) ஒரு சிறந்த மருந்தாகும்.
பார்வைத் திறனில் பிரச்சினை இருப்பவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டு வர கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

செவ்வாழைப்பழம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தன்மை கொண்டது. வாரம் ஒரு முறை செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க

செவ்வாழையில் உள்ள பொட்டாசியம் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க பெரிதும் உதவும்.

எலும்புகள் வலிமையடைய

செவ்வாழை பழத்தில் உள்ள கால்சியம், எலும்புகள் வலிமையடைய பெரிதும் உதவும். எலும்புகள் உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடவேண்டும்.

சுறுசுறுப்புடன் இருக்க

உடல் என்றும் சுறுசுறுப்புடன் இருக்க தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட வேண்டும்.

புற்றுநோய் வராமல் தடுக்க

தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் புற்று நோய் வராமல் தடுக்கலாம்.

நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்த

நரம்பு மண்டலம் பலவீனமாக இருப்பவர்கள் தினமும் காலை 6 மணிக்கு ஒரு செவ்வாழைப்பழம் என 48 நாட்கள் சாப்பிட்டு வர கை கால் நடுக்கம், கை கால் மரத்துப்போதல் போன்ற நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும்.

என்றும் இளமையுடன் இருக்க

கருப்பான தலைமுடி, சுருக்கமில்லாத சருமம், தெளிவான கண் பார்வை என செவ்வாழைப்பழம் சாப்பிடுபவர்கள் என்றும் இளமையுடன் இருப்பர்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க

செவ்வாழை பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவும்.

செவ்வாழை பழம் சாப்பிட உகந்த நேரம்

செவ்வாழைப்பழத்தை சாப்பிடுவதற்கு காலை ஆறு மணிக்கு சாப்பிடலாம் அல்லது பகல் பதினோரு மணிக்கு சாப்பிடலாம் அல்லது மாலை நாலு மணிக்கு சாப்பிடலாம். உணவு எடுத்தவுடன் செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டால் இதமான உணர்வு ஏற்படும். மேலும் செவ்வாழை பழத்தின் முழு சத்துக்களும் நமக்கு கிடைக்காது. இது எல்லா பழங்களுக்கும் பொருந்தும்.

குறிப்பு:

சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின்புதான் செவ்வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.