தினமும் வேர்கடலை (Peanut)சாப்பிட்டு வருவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். வேர்கடலையில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு, புரோட்டின், இரும்புச்சத்து, விட்டமின், கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. வேர்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
இதய நோய் வராமல் தடுக்கலாம்
வேர்க்கடலை(Peanut) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கலாம். வேர்கடலை சாப்பிடுவது இதய வால்வுகளை பாதுகாக்க பெரிதும் உதவும்.
எலும்புகள் பலம் பெற
வேர்க்கடலையில் உள்ள கால்சியம் எலும்புகளை பலப்படுத்த உதவும். பெண்கள் தொடர்ந்து நிலக்கடலை சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
என்றும் இளமையுடன் இருக்க
வேர்க்கடலையில்(Peanut) உள்ள பாலிபீனால்கள் முதுமை ஏற்படாமல் தடுத்து, என்றும் இளமையுடன் இருக்க பெரிதும் உதவும்.
மன அழுத்தத்தை நீக்க
வேர்க்கடலையில் உள்ள டிரைப்டோபீன் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
தசைகளை வலிமையாக்க
வேர்கடலையில் உள்ள விட்டமின் பி உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது. இது தசைகளை வலிமையாக பெரிதும் உதவும். உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க வேர்க்கடலை பெரிதும் பயன்படும்.
கருப்பை கோளாறுகள் நீங்க
வேர்கடலையில் பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. பெண்கள் வேர்கடலை சாப்பிட்டு வந்தால் கருப்பைகட்டிகள், நீர்க்கட்டிகள் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம். வேர்க்கடலையில் உள்ள சத்துக்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படாமல் தடுக்க பெரிதும் உதவும்.
நினைவாற்றல் அதிகரிக்க
வேர்க்கடலையில் உள்ள விட்டமின் பி3 மூளையின் செயல்பாட்டை தூண்ட பெரிதும் உதவும். மேலும் நினைவாற்றல் அதிகரிக்கவும் வேர்கடலை பெரிதும் பயன்படும்.
கொழுப்பை குறைக்க
வேர்க்கடலையில் உள்ள தாமிரச்சத்து உடலில் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க பெரிதும் உதவும்.
பித்தப்பை கல்லை கரைக்க
தினமும் வேர்கடலை சாப்பிட்டு வந்தால் பித்தப்பையில் உள்ள கல்லை கரைக்கலாம்.