Skip to content

Health Benefits Of Pana Kilangu in Tamil

Health Benefits Of Pana Kilangu in Tamil

பனங்கிழங்கு Pana Kilangu

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனம் பழத்தை மண்ணில் புதைத்து வைத்த சில மாதங்களில் முளை வந்து வளர ஆரம்பிக்கும். இவ்வாறு முளை விட ஆரம்பிக்கும் போது அதனை தோண்டிப் பார்த்தால் பனங்கிழங்கு(Pana Kilangu) வந்திருக்கும்.

பனங்கிழங்கை எவ்வாறு சாப்பிடலாம்?

1.பனங்கிழங்கை அதன் தோலை நீக்கி, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து வேக வைக்க வேண்டும். பின்னர் பனங்கிழங்கு வெந்த பிறகு, நாரை மட்டும் அகற்றிவிட்டு அதன்பின்பு கிழங்கை சாப்பிடலாம்.
2. பனங்கிழங்கு வேகவைத்து எடுத்து, பின்னர் நாரை நீக்கி விட்டு, சிறுசிறு துண்டுகளாக வெட்டி நன்கு காய வைக்க வேண்டும். பின்பு நன்கு காய்ந்தவுடன் மாவு அரைக்கும் இடத்தில் கொடுத்தால் நன்கு அரைத்து மாவாக எடுக்கலாம். அந்த மாவை கொண்டு தோசை, கஞ்சி போன்ற உணவு வகைகளை செய்து சாப்பிடலாம்.
3.வளரும் குழந்தைகளுக்கு பாலுடன் பனங்கிழங்கு(Pana Kilangu) மாவு சேர்த்து காய்ச்சி, பின்பு அந்த பாலை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி அதிகரிக்கும். மேலும் குழந்தைகளின் உடல் பலம் பெறும்.

பனங்கிழங்கின் பயன்கள்

ரத்தசோகையை சரி செய்ய

பனங்கிழங்கு அதிக இரும்பு சத்து கொண்டது. இரும்புச்சத்து குறைவு காரணமாக ஏற்படும் ரத்தசோகையை சரி செய்ய பனங்கிழங்கு பெரிதும் உதவும்.

நீரிழிவு நோய்

பொதுவாக நீரிழிவு நோயாளிகள் பூமிக்கடியில் விளையும் எந்தக் கிழங்கையும் சாப்பிடக்கூடாது என்று சொல்வதை கேட்டிருப்போம். ஆனால் பனங்கிழங்கு இன்சுலின் உற்பத்தியைத் தூண்டி இன்சுலினைச் சுரக்க பெரிதும் உதவும். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பனங்கிழங்கு பெரிதும் பயன்படும்.

உடல் சூடு குறைய

பனங்கிழங்கு குளிர்ச்சித் தன்மை கொண்டது. இதனால் உடல் சூட்டை தணிக்க பனங்கிழங்கு சாப்பிடலாம்.

உடல் எடையை குறைக்க

உடலில் செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் தேவையற்ற கொழுப்பு சேராமல் தடுக்கலாம். இதனால் உடல் எடையை குறைக்க முடியும்.

கர்ப்பப்பை வலுப்பெற

பனங்கிழங்கு சாப்பிட்டுவந்தால் கர்ப்பப்பை வலுப்பெறும்.

எலும்புகள் பலம் பெற

பனங்கிழங்கு அதிக கால்சியம் சத்து கொண்டது. இதனால் எலும்புகள் பலம் பெற பனங்கிழங்கு பெரிதும் உதவும். தசை சுருக்கம், எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் சரி செய்ய பனங்கிழங்கு பெரிதும் பயன்படும்.

மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய

பணம் கிழங்கில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சினை சரிசெய்ய உதவும்.

1 thought on “Health Benefits Of Pana Kilangu in Tamil”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *