ஊறவைத்த வெந்தயத் தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பெறும் நன்மைகள்
- வெந்தயத்தை(Fenugreek) அப்படியே சாப்பிடுவதை விட, வெந்தயம் ஊறவைத்த தண்ணீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.
- வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால் அசிடிட்டியிலிருந்து விடுபடலாம்.
- ஊறவைத்த வெந்தயத் தண்ணீரை குடிப்பதால் செரிமான பிரச்சனைகள் சரியாகும்.
- மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை எதிர்த்து போராட வெந்தயம்(Fenugreek) பெரிதும் உதவும்.
- ஊறவைத்த வெந்தய தண்ணீரை குடிப்பதால் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் நீங்கும்.
- வெந்தயத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் விட்டமின் கே சருமத்தில் உள்ள கருவளையங்கள் மற்றும் அழுக்குகளை நீக்க உதவுகிறது.
- வெந்தயம் பல் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள், லினோலிக் அமிலம் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. ஆய்வுகளின்படி மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் ஆகியவற்றை சரி செய்ய வெந்தயம் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
- வெந்தயம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை போக்க பெரிதும் உதவும்.
- ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
- வெந்தயத்தில் உள்ள கால்சியம் எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது.
- வெந்தயத் தண்ணீரை குடித்தால் உடல் எடையை குறைக்கலாம்.
- சிறுநீரகத்தில் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் வெந்தய தண்ணீரை குடித்தால் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
- வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம் சத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
- வெந்தயம் உடல் சூட்டை தனித்து உடலை குளிர்ச்சி அடைய செய்கிறது.
வெந்தயத் தண்ணீர் தயாரித்தல்
ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கப் தண்ணீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் அந்த தண்ணீரை வடிகட்டிக் குடிக்க வேண்டும்.