தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
நெல்லிக்காய்(Amla) சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் இன்னும் அதிகமான நன்மைகள் கிடைக்கும். தினமும் காலையில் தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை தடுக்கலாம். தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
முதுமையை தள்ளிப் போடலாம்:
தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காய்(Amla) சாப்பிடுவதால் முதுமையை தள்ளிப் போடலாம். தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் ஏற்படாமல் தடுக்க தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிடலாம்.
கல்லீரலை சுத்தப்படுத்த:
தேனில் ஊற வைத்த நெல்லிக்காய்(Amla) சாப்பிடுவதால் உடலிலுள்ள டாக்ஸின்கள் வெளியேறி கல்லீரல் சிறப்பாக செயல்பட உதவும். மேலும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவும். தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவது மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த தீர்வளிக்கும்.
கொலஸ்ட்ராலை குறைக்க:
தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம்.
சுவாசப் பிரச்சனைகளை சரி செய்ய:
தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா மற்றும் சுவாச சம்பந்தமான பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.
இரத்த அணுக்களை அதிகரிக்க:
தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த அணுக்களின் அளவை அதிகரிக்கலாம். உடலில் ரத்த அணுக்கள் எண்ணிக்கை அதிகரித்தால் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கலாம். மேலும் உடலின் அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக செயல்படும்.
சளி, இருமல் சரியாக:
சளி, இருமல் மற்றும் தொண்டையில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்ய தினமும் தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடலாம்.
அல்சர் சரியாக:
தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் அல்சர் பிரச்சனை சரியாகும்.
செரிமான பிரச்சனை நீங்க:
தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் உண்ணும் உணவு எளிதில் செரிமானம் ஆகும். மேலும் மலச்சிக்கல் பிரச்சினையும் சரியாகும். மேலும் பைல்ஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கும் சிறந்த தீர்வு கிடைக்கும்.
மலட்டுத்தன்மை பிரச்சினைக்கு:
தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை பிரச்சனை சரியாகும்.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற:
தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேறும்.
தேன் நெல்லிக்காய் செய்முறை:
ஒரு கண்ணாடி பாட்டில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பாதி அளவு தேனை எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் நெல்லிக்காய்களை போட்டு மூடி வைக்க வேண்டும். பின்னர் சிறிது நாட்கள் கழித்து பார்த்தால், நெல்லிக்காய் தேனில் நன்றாக ஊறியிருக்கும். பின்பு அதனை தினமும் சாப்பிட்டு வரலாம். தேனில் ஊறவைத்து நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் மேற்கூறிய நன்மைகளைப் பெறலாம்.
Recommended Articles:
Onion hair oil for Hair growth
Benefits of Aloevera For Hair growth
Best food for winter season in India
Amazing Health Benefits Of Honey
Figs: Nutrition and 15 amazing health Benefits
Top 10 Vegetables That Are High in Vitamin C