சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகள்
சில வருடங்களுக்கு முன்பு வரை நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருந்த விஷயங்களில் ஒன்று சைக்கிள்(Cycling) . கிராமம், நகரம் என்ற வேறுபாடுகள் இன்றி எல்லோரும் தினமும் சைக்கிளில்தான் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். வயது முதிர்ந்த மனிதர்கள் கூட நெடுந்தூரம் சைக்கிளை மிதித்து பயணம் செய்வார்கள். பைக், கார் எல்லாம் வரத் தொடங்கிய பிறகு சைக்கிள் உபயோகமற்றதாக மாறிவிட்டது. கிராமங்களில்கூட, சைக்கிள் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது. தற்சமயம் மீண்டும் சைக்கிள் மீது இளம் தலைமுறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். இப்ப சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
- சைக்கிள்(Cycling) ஓட்டும்போது இதயத்துடிப்பு சீராகும். வயது முதிர்வு காரணமாக ஏற்படும் இதய வலுவிழப்பு, இதய அடைப்பு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.
- சைக்கிள் ஓட்டுவதால் டைப் 1, டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
- தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால் மூளையின் செயல்பாடுகள் அதிகரித்து சுறுசுறுப்பு உண்டாகும்.
- சைக்கிள் ஓட்டுவதால் கால் தசைகள், தொடைப் பகுதி தசைகள், எலும்பு பகுதிகள், முதுகு தண்டுவடம், இடுப்புப்பகுதி போன்றவை வலிமை பெறும்.
- ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் வராமல் இருக்க சைக்கிள் ஓட்டுவது சிறந்தது.
- சைக்கிள் ஓட்டுவதால் உடல் எடையை குறைக்கலாம்.
- சைக்கிள் ஓட்டுவதால் மனதளவில் புத்துணர்ச்சி கிடைக்கும்.
- சைக்கிள் ஓட்டுவதால் மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்சினை இருப்பவர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.
- சைக்கிள் ஓட்டும்போது அதிக வியர்வை வெளிப்படுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.
- மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் போன்றவற்றிற்கான முக்கிய காரணம் உடல் பருமன். சைக்கிள் ஓட்டுவதன் மூலம் உடல்பருமன் தடுக்கப்படுவதுடன் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது.
- ஆய்வின்படி வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி மற்றும் கீல்வாதம் போன்ற நோய்கள் தொடர்ச்சியாக சைக்கிள் ஓட்டுவதன் மூலம் குறைந்திருக்கிறது.
- ஆய்வின்படி சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஆயுள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
- சைக்கிள் ஓட்டுவதால் பக்கவாதம் வராமல் தடுக்கப்படுகிறது.
குறிப்பு:
- சைக்கிள் ஓட்டுபவர்கள், எடுத்தவுடன் வெகுதூரம் பயணம் செய்ய வேண்டாம். 15 நிமிடத்தில் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தையும் தூரத்தையும் அதிகப்படுத்த வேண்டும்.
- தாங்க முடியாத மூட்டு வலி, அதிக உடல் எடை, இதய கோளாறு போன்ற பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைக்கு பிறகு சைக்கிள் ஓட்டவும்.
- வயது மற்றும் உடல் நிலையைப் பொறுத்தே சைக்கிள் ஓட்டும் நேரமும் வேகமும் அமைய வேண்டும்.