கேரட்:
கேரட்டில் அதிகளவு நார்ச்சத்து,பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. கேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது.
கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(Health Benefits of Carrot):
- கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண்ணுக்கு மிகவும் நல்லது.
- கேரட்டை தினமும் சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சம்பந்தமான பிரச்சினைகள் வராமல் தடுத்து கண்பார்வையை தெளிவாக்குகிறது. மாலைக்கண் நோய் வராமல் தடுக்க கேரட் பெரிதும் உதவும்.
- உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க கேரட் உதவும்.
- கேரட் உடலை புத்துணர்ச்சியாக வைக்க பெரிதும் உதவும்.
- கேரட் ஜூஸ் உடன் எலுமிச்சைச்சாறு கலந்து குடித்தால் பித்தம் நீங்கும்.
- கேரட்டில் உள்ள சத்துக்கள் உடலுக்கு நல்ல பொலிவைத் தரும்.
- கேரட் ஜூஸ் குடித்தால் வயிற்றில் உள்ள கற்கள், கட்டிகள், புண்கள் போன்ற பிரச்சினைகள் சரியாகும்.
- குடல் புண் வராமல் தடுக்க கேரட் உதவும்.
- சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சலைத் தடுக்க கேரட் பெரிதும் உதவும்.
- கேரட் ஜூஸ் குடித்தால் நெஞ்செரிச்சல் சரியாகும்.
- கேரட் ஜூஸ் உடன் சிறிதளவு இஞ்சி சாறு கலந்து குடித்தால் வாயுத்தொல்லை நீங்கும்.
- மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கேரட் ஜூஸ் குடித்தால் விரைவில் குணமாகும்.