Table of Contents
ஆவாரம் பூ பயன்கள் Benefits Of Aavarampoo:
ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ என்ற தமிழ் சொல் உள்ளது.சாலையோரங்களிலும் வெட்ட வெளிகளிலும் பூத்துக் கிடக்கும் இந்த ஆவாரம் பூவை ஒரு கற்பக மூலிகையாகும் என்று கூறுகிறார்கள். ஆவாரம் பூவில் தங்கச்சத்து உள்ளது என்பதால் அது தங்கத்திற்கு சமமாக கருதப்பட்டு விஷு கனி தரிசனத்தில் இடம் பெற கூடியது.
சர்க்கரை நோய்க்கு Aavarampoo For Diebetics:
மஞ்சள் நிறமுடைய அழகிய குறுஞ்செடி. இந்த ஆவாரம் பூ சர்க்கரை நோய்க்கு(Sugar) மருந்தாகும். மாலை வேளையில் பாலில் ஆவாரம் பூவை போட்டு கொதிக்கவைத்து குடிக்கலாம்.ஆவாரம் பூ துவையல், ஆவாரம்பூ சட்னி, ஆவாரம்பூ சாம்பார் என பல வடிவங்களில் செய்து சாப்பிடுவது உடம்புக்கு மிகவும் நல்லது.
ஆவரம் பூவை அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசையாக செய்தும் சாப்பிடலாம்.
ஆவாரம் பூவை வெயிலில் காயவைத்து பொடித்து வேளைக்கு ஒரு ஸ்பூன் ஆவாரம் பூ பொடியை சாப்பிட்டு வர சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.
உடல் சூட்டை தணிக்க:
ஆவாரம் பூ அல்லது ஆவாரம் பூ பொடியை பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம் அல்லது கூட்டு பொரியலாக செய்தும் சாப்பிடலாம். ஆவரம் பூவை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் சூடு, வெள்ளைப்படுதல், உடல் நாற்றம், உடம்பில் உப்பு பூத்து போதல், வறட்சி, களைப்பு போன்றவை சரியாகும்.
முகத்தில் உள்ள கருமையை விரட்டும் ஆவாரம் பூ:
ஆவாரம் பூவை நாள்தோறும் பயன்படுத்தி வந்தால் உடம்பு பொன்னிறமாக காட்சியளிக்கும்.
கஸ்தூரி மஞ்சள், கிச்சிலிக்கிழங்கு, பச்சைப் பயறு, கோதுமை தவிடு, ரோஜா இதழ் ஆகியவற்றுடன் காயவைத்த ஆவாரம் பூவையும் சேர்த்து பொடியாக்கி குளியல் பவுடராக பயன்படுத்தி வந்தால் தோல்நோய்கள் விலக்குவதோடு முகத்தில் உள்ள கருமை படர்தல், தேமல், அழுக்கு தேமல், வியர்வை நாற்றம் போன்றவை விலகி உடல் புது பொலிவுடன் இருக்கும்.
நெற்றியிலும், கன்னத்திலும் கருமை படர்ந்து இருந்தால், ஆவாரம்பூவை அரைத்து சாறெடுத்து அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். அதனுடன் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து தேய்த்து குளித்துவந்தால் தேமல், தோல் சுருக்கம் ஆகியவை நீங்கி முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.
ஆவாரம் பூ ஃபேஸ் பேக் Aavarampoo Face Pack:
ஆவாரம் பூ முகத்தில் உள்ள கருமையை நீக்கி முகத்தை பொலிவுடன் மின்ன வைக்கும். ஆவாரம் பூ ஃபேஸ் பேக் எப்படி பண்ணலாம் பாக்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஆவாரம் பூ- ஒரு ஸ்பூன்
குப்பைமேனி- அரை ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள்- கால் ஸ்பூன்
ரோஸ் வாட்டர்- சிறிதளவு
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கோங்க. அதில் ஒரு ஸ்பூன் ஆவாரம்பூ போடி சேர்த்துக்கோங்க. அப்புறம் குப்பைமேனி பவுடர் அரை ஸ்பூன் சேர்த்துக்கோங்க. கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் சேர்த்துக்கோங்க. கஸ்தூரி மஞ்சள் அதிகமா சேர்த்தால் முகத்தில் எரிச்சல் உண்டாகும்.அதனால் குறைவாக சேர்த்துக்கொள்வது நல்லது. ரோஸ் வாட்டர் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளுங்கள். எல்லாத்தையும் சேர்த்து நல்ல மிக்ஸ் பண்ணிக்கோங்க. அப்புறம் இந்த பேஸ்டை எடுத்து முகத்தில அப்ளை பண்ணுங்க. 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவுடன் மின்னும். முகத்தில் உள்ள எண்ணெய் தன்மை நீக்கவும் ஆவாரம் பூ உதவும்.