கிரீன் டீ(Green Tea):
க்ரீன் டீ(Green Tea) உடலுக்கு மட்டுமல்லாமல் முக அழகைப் பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது. கிரீன் டீயில் உள்ள கனிமச்சத்துக்கள், விட்டமின்கள் மற்றும் பிளேவனாய்டுகள் முக அழகை பராமரிக்க பெரிதும் உதவும். கிரீன் டீ சரும சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மற்றும் பொலிவிழந்த சருமம், முகப்பரு ஆகியவை ஏற்படாமல் தடுக்க உதவும். சரும புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க கிரீன் டீ பெரிதும் உதவும். க்ரீன் டீ குடிப்பதும் முக அழகை பராமரிக்க உதவும். மேலும் க்ரீன் டீயை முகத்திற்கு பயன்படுத்தும் போதும் சருமம் பொலிவாக இருக்க பெரிதும் உதவும்.
பொலிவான சருமத்திற்கு:
1 டீஸ்பூன் க்ரீன் டீ பொடியுடன் சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்பு அந்த கலவையை முகத்தில் தேய்க்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பொலிவாக மாறும்.
பளிச்சென்று மின்னும் சருமத்திற்கு:
கிரீன் டீ(Green Tea) பொடியுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அந்த கலவையை முகத்தில் தேய்க்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர முகம் பளிச்சென்று மின்னும். முகத்தில் உள்ள தழும்புகள் மறையும்.
சரும சுருக்கங்கள் நீங்க:
கிரீன் டீ பொடியுடன் சிறிதளவு தேன் கலந்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அந்த கலவையை முகத்தில் தேய்க்க வேண்டும். பின்பு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர முகத்தில் இருக்கும் சரும சுருக்கங்கள் நீங்கும். மேலும் சருமம் வயதான தோற்றம் அடையாமல் பாதுகாக்கலாம்.
முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க:
கிரீன் டீ பொடியை சிறிதளவு அரிசி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அந்த கலவையை முகத்தில் தேய்க்க வேண்டும். பின்பு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்துவர முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி முகம் பொலிவுடன் மாறும்.