சமையலுக்கு மட்டுமின்றி சருமம் மற்றும் கூந்தல்(Hair) பராமரிப்புக்கும் நெய்(Ghee) பயன்படுத்தலாம். நெய் கூந்தல் பராமரிப்புக்கு பயன்படுத்தும்போது கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
1.நெய்யில்(Ghee) உள்ள விட்டமின் ஏ முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
2.நெய்யில் உள்ள விட்டமின் டி முடி உதிர்தலை எதிர்த்து போராட பயன்படும். 3.நெய்யில்(Ghee) உள்ள கொழுப்பமிலங்கள் முடியின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும்.
4.கூந்தலில் நுனி முடி பிளவு ஏற்படுவது கூட கூந்தல் வளர்ச்சியை பாதிக்கக்கூடியது. சரியான இடைவெளியில் முடி வெட்டாமல் இருப்பதும், முடியை பராமரிக்காமல் இருப்பதும் நுனி முடி பிளவு காரணமாகும். இவை முடியின் அடர்த்தியை குறைத்து முடி குறைவாக இருப்பது போல் காட்டும். இந்த நுனி முடி பிளவு பிரச்சினையை சரிசெய்ய நெய் பயன்படுத்தலாம். நெய்யை கூந்தலின் நுனியில் தடவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வர நுனி முடி பிளவு பிரச்சினை சரியாகும்.
5.நெய் சிறந்த கண்டிஷனராகவும் செயல்படுகிறது. நெய்யுடன் சம அளவு ஆலிவ் ஆயில் கலந்து, ஷாம்பு போட்ட பிறகு தலைக்கு பயன்படுத்துங்கள். இது பயன்படுத்தியபின் கூந்தல் பட்டுப் போல மின்னும்.
6.வறண்ட கூந்தலுக்கு விட்டமின் ஏ, விட்டமின் டி, கொழுப்பு அமிலங்கள் ஆகியவை தேவையான ஒன்றாகும். இவைகள்தான் முடியை(Hair) ஈரப்பதத்துடன் வைக்க பெரிதும் உதவுகின்றன.
7.தலையில் ஈரப்பதம் இருந்தால் முடி உதிர்தலை கட்டுப்படுத்திவிடலாம். ரெண்டு ஸ்பூன் நெய் எடுத்து உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்த உதவும். நெய் இல் இருக்கும் விட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் முடியின்(Hair)ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும்.
8.கூந்தலுக்கு நெய் பயன்படுத்துவதால் அரிப்பு, பொடுகு, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். நெய்யை கூந்தலுக்கு வழுக்கை மற்றும் இளநரை(Grey Hair) போன்ற பிரச்சினைகளும் வராமல் தடுக்கலாம்.