Table of Contents
குளிர்காலத்தில் எலும்புகளை பாதுகாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:
குளிர்காலத்தில் உடலின் வெப்பநிலை குறைவதால் தசைகள் இறுகி மூட்டு வலி பிரச்சனை ஏற்படும். மூட்டுவலி பிரச்சினை தடுக்க குளிர்காலத்தில் சாப்பிடவேண்டிய உணவு பொருட்கள் பற்றி பார்க்கலாம்.
நெய்
நெய்யில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், விட்டமின்கள், நல்ல கொழுப்புச்சத்து போன்றவை உள்ளது. நெய் மூட்டுகள் விறைப்பு அடைவதை தடுக்க உதவுகிறது. நெய் மூட்டுகளில் உராய்வு மற்றும் வீக்கத்தை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.
இஞ்சி மற்றும் பூண்டு:
இஞ்சி மற்றும் பூண்டு கிருமிநாசினியாக செயல்பட்டு மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. இஞ்சி மற்றும் பூண்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இஞ்சி மற்றும் பூண்டை சமையலில் பயன்படுத்தலாம். மேலும் இஞ்சி டீ போட்டு குடிக்கலாம்.
திணை
திணையில் அமினோ அமிலம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. திணை அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. திணை மூட்டு வலியை குறைத்து உடலை சூடாக வைத்துக்கொள்ள உதவுகிறது. திணை எலும்புகளின்(bones) பாதுகாப்பிற்கு பெரிதும் உதவும்.
பச்சை இலை காய்கறிகள்:
குளிர்காலத்தில் பச்சை இலைக் காய்கறிகள் அதிகமாக விளையும். பச்சை இலைக் காய்கறிகள் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்தது. பச்சை இலைக் காய்கறியில் உள்ள சல்போராபேன் எலும்பு(bones) சம்பந்தமான பிரச்சினைகளை தடுக்கக்கூடியது.
எலும்பு சூப்
ஆடு மற்றும் கோழி இறைச்சியின் எலும்புகளை சூப் போட்டு குடிக்கலாம். இந்த எலும்பு சூப்பில் அமினோ அமிலங்கள், தாதுக்கள்,குளுக்கோசமைன் போன்றவை நிறைந்துள்ளது. சூப் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் மூட்டு வலிக்கும் சூப் மிகவும் நல்லது.
நட்ஸ் வகைகள்
பாதாம், வால்நட், முந்திரி போன்ற நட்ஸ்களில் விட்டமின் ஈ, கால்சியம், நார்ச்சத்து, மெக்னீசியம் ,துத்தநாகம், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. நட்ஸ்களில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குறைக்கும் நட்ஸ் உதவும்.