வெயிலை எதிர்கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்
வெயில்(Summer) காரணமாக அதிக தாகம், உடல் சோர்வு, உடல் சூடு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். வெயிலை சமாளிக்க நீர்ச்சத்துள்ள உணவுகள் அவசியம். வெயில் காலம் வந்துவிட்டால் உணவு முறைகளிலும் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். அப்போதுதான் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து வெயிலை எதிர்கொள்ள சக்தி கிடைக்கும். வெயிலை சமாளிக்க என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
-
வெள்ளரிக்காய்
அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்று வெள்ளரிக்காய்.
கோடைக்கு(Summer) மிகவும் ஏற்ற வெள்ளரிக்காயை சாலட் செய்து சாப்பிடலாம் அல்லது தயிரில் கலந்தும் சாப்பிடலாம் . இதன் காரணமாக உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும்.
-
தர்பூசணி
நீங்கள் கடுமையாக சூரிய வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் தர்பூசணியை சாப்பிட்டால் போதும் உடல் குளிர்ச்சியாகி விடும். தர்பூசணியில் உள்ள லைகோபீன் சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்க உதவும்.
-
ஆரஞ்சு
ஆரஞ்சில் 80% நீர்ச்சத்து உள்ளது. அதனால் வெயில் நாட்களில் ஆரஞ்சு உட்கொள்வதால் உடல் வெப்பத்தை தணிக்கலாம்.
-
தயிர்
புரோட்டீன்களை உள்ளடக்கிய தயிர் வெயில் நாட்களில் தவிர்க்க முடியாத உணவு. தயிரில் இருக்கும் ப்ரோபயாடிக் ஜீரணசக்தியை சீராக்க உதவும்.
-
முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ் வெயில் காலத்திற்கு ஏற்றது. முட்டைக்கோஸ் உடலில் உள்ள தேவையில்லாத நீரை வெளியேற்ற வைத்துவிடும். அதே நேரத்தில் நீச்சத்து அதிகரிக்கவும் முட்டைக்கோஸ் உதவும். சிறுநீரகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்க முட்டைக்கோஸ் உதவும்.
-
ஆப்பிள் மற்றும் பேரிக்காய்
பைபர் சத்து அதிகம் கொண்ட பழங்களான ஆப்பிள் மற்றும் பேரிக்காய் வெயில் காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை நீக்க பெரிதும் உதவும்.
-
கிரீன் டீ
கிரீன் டீ அதிகளவு நீர்ச்சத்தை தரக்கூடியது. வெயில் காலத்தில் கிரீன் டீ குடித்தால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும்.
-
திராட்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரி
திராட்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரி உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். வெயிலால் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்க திராட்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரி பெரிதும் உதவும்.
-
முலாம்பழம்
கிர்னி பழம் என்ற பெயரிலும் முலாம் பழம் அழைக்கப்படுகிறது. கோடைகாலத்தில் தர்பூசணிக்கு அடுத்ததாக அதிக முக்கியத்துவம் நிறைந்தது முலாம்பழம். முலாம் பழத்தை தினமும் ஜூஸ் ஆக குடிக்கலாம்.
முலாம் பழத்தை ஜூஸாக குடித்துவந்தால் உடலின் வெப்பம் தணியும்.
-
இளநீர்
வெயில் காலத்தில் உடலை ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவும் ஒரு அற்புத பானம் இளநீர். இளநீர் வயிற்றை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
-
புதினா
புதினா குளிர்ச்சித்தன்மை கொண்டுவரும் மூலிகை ஆகும். புதினாவை வெயில் காலத்தில் உணவில் சேர்த்து வந்தால் உடல் வெப்பநிலை சீராக பராமரிக்கப் படுவதோடு நல்ல புத்துணர்ச்சியுடனும் இருக்க உதவும்.
-
தக்காளி
தக்காளியில் உள்ள கரோட்டினாய்டு மற்றும் லைகோபின் சருமத்தை வெயில் பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும்.