Skip to content

Foods For Low BP In Tamil

Foods For Low BP In Tamil

குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

குறைந்த ரத்த அழுத்தம்( Low BP) இருப்பவர்கள் சில  உணவுகளை சாப்பிடுவதன் மூலம்  இரத்த அழுத்தத்தை சீராக வைக்க முடியும். குறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி பார்க்கலாம்.

  1. உப்பு

குறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்கள்( Low BP) உணவுல வழக்கமாக சேர்த்துக்கொள்ளும் அளவைவிட  கொஞ்சம் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்து சாப்பிடனும். ஏனென்றால் குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு உடலில் சோடியம் அளவு சீராக வைத்திருப்பது அவசியம். அதற்கு முன்பு அவங்க உடம்புல போதுமான அளவு சோடியம் இல்லை என்பது  பத்தி  மருத்துவர் கிட்ட கலந்து ஆலோசனை பெற்ற பிறகு உப்பை உணவில் சேர்த்து  கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவு செய்யணும். ஏனென்றால் உணவில் அதிகமாக உப்பு சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம், உடம்பில் நீர் தேக்கம் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. அதனால உப்பை அதிகப்படுத்துவதற்கு முன்பு  மருத்துவர் கிட்ட கலந்து ஆலோசனை பெற்ற பிறகு உப்பின் அளவை அதிகரிக்கிறது நல்லது.

  1. துளசி இலைகள்

ரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், குறைந்த ரத்த அழுத்தத்தை( Low BP) அதிகப்படுத்தவும் தினமும் துளசி இலைகளை மென்று சாப்பிடலாம். ஏனென்றால் துளசி இலைகளில் பொட்டாசியம், மெக்னீசியம் இருக்கு. அதோட துளசி இலைகளில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும். அதோட உடம்பில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவும்.

3.உலர் திராட்சைகள்

தினமும் கொஞ்சம் உலர் திராட்சைகளை இரவு தண்ணீரில் ஊறவைத்து, காலையில் ஊற வைத்த உலர் திராட்சைகளை சாப்பிடணும். உலர் திராட்சைகள் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினசரி உணவோடு கொஞ்சம் உலர்திராட்சை களையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அவர்கள் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க முடியும்.

  1. பாதாம்

தினமும் ஐந்து பாதாமை இரவு தண்ணீரில் ஊறவைத்து , காலையில் தோலுரித்த பாதாமை(Almond) சாப்பிட வேண்டும். பாதாமில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருக்கு. குறைந்த ரத்த அழுத்தம் இருக்கிறவங்க அவங்களோட அன்றாட உணவில்  பாதாம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அவங்களோட இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள முடியும்.  மேலும் அவர்களுடைய ஆரோக்கியமும் மேம்படும்.

  1. காபி மற்றும் டீ

குறைந்த ரத்த அழுத்தம் இருக்கிறவங்க காபி மற்றும் டீ போன்ற பானங்களை அளவோடு எடுத்துட்டு வரலாம். குறிப்பாக குறைந்த ரத்த அழுத்தம்  தீவிரமாக இருக்கும்போது ஒரு கப் காபி குடித்தால் அது  அவர்களுடைய  ரத்த அழுத்தத்தை தற்காலிகமாக அதிகரிக்கும்  என்று மருத்துவர்கள் சொல்றாங்க. காபி மற்றும் டீ போன்ற பானங்களை குடிக்க  விருப்பமில்லாதவர்கள், அதற்கு மாறாக கிரீன் டீயை தேர்வு செய்து குடிக்கலாம். அதாவது கொய்யா இலை டீ, செம்பருத்தி  இலை டீ, லெமன் கிராஸ் டீ  போன்ற  கிரீன் டீ(Green Tea) களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து குடிக்கலாம். இதனால அவங்களோட குறைந்த ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள முடியும்.

  1. நீர்ச்சத்து

குறைந்த ரத்த அழுத்தம் இருக்குறவங்க, அவர்களது உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இளநீரைத் தாராளமாகக் குடிக்கலாம். இளநீர் உடம்புக்கு எலக்ட்ரோலைட்டை அதிகமாக கொடுக்கக்கூடியது. உடம்பில் தண்ணீர் சத்து குறையும் போது குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படும். அதை சரி செய்ய கூடியதுதான் இளநீர். தினமும் அதிகமாக தண்ணீர் குடித்து கொண்டு வருவதோடு, பழச்சாறுகளையும்  குடிக்கலாம். குறிப்பாக மாதுளைப் பழச்சாறு அதிகமாக குடிக்கலாம். ஏனெனில்  மாதுளைப்பழத்தில்  உள்ள பாலிஃபீனால்கள் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவும்.

  1. உணவு சாப்பிடும் முறை

குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்கள் நாள்தோறும் உணவை மூன்று முறையாக சாப்பிடுவதைவிட சிறிது சிறிதாக பிரித்து சாப்பிடுவதை பழக்கமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நீண்ட இடைவெளியை தவிர்க்க ஆரோக்கியமான சிற்றுண்டிகளை அப்பப்ப சாப்பிட்டு வரலாம். இதனால உணவுக்குப்பின் இரத்த அழுத்தத்தில் குறைவு ஏற்படாமல் தடுக்கலாம்.

  1. முட்டை

விட்டமின் B12 அதிகமுள்ள  உணவுகளை சாப்பிடவில்லை எனில் உடம்பில் ரத்த அழுத்தத்தின் அளவு குறைந்து, உடலில் சோர்வு ஏற்படும். மேலும் சீக்கிரமாகவே உடல் தளர்ந்து காணப்படும். அதனால் குறைந்த ரத்த அழுத்தம் இருக்கிறவங்க விட்டமின் B12  அதிகமுள்ள முட்டையை அவசியமாக சேர்த்து சாப்பிடணும். அதோடு அன்றாட உணவு பட்டியலில் சத்துக்கள் நிறைந்த தானியங்கள், மீன், ஆட்டிறைச்சி போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிட்டு வரணும்.

  1. ஆலிவ் ஆயில்

நம்ம உடம்பில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என்ற இரண்டு வகையான குறிப்புகள் இருக்கு. அதில்  நல்ல வகை கொழுப்புக்கு உதாரணமாக ஆலிவ் ஆயில் எடுத்துக்கொள்ளலாம்.  ஆலிவ் ஆயிலில்  பாலிஃபீனால் என்று சொல்லக் கூடிய வேதிப்பொருள்  இருக்கு. அது குறைந்த ரத்த அழுத்தத்தை சரி சமமாக வைத்துக் கொள்ள உதவும். அதனால் ஆலிவ் ஆயிலில் தயாரிக்கப்பட்ட உணவுகளை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குறைந்த ரத்த அழுத்தத்தை சரி சமமாக வைத்துக்கொள்ள முடியும்.

குறிப்பு:

குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இப்ப சொன்ன இந்த உணவுகளோடு சில பழக்க வழக்கங்களை பின்பற்றி வரணும். அதாவது நீண்ட நேரம் ஒரே இடத்தில்  நின்றுகொண்டிருந்தால், இதயத் துடிப்பு குறையும். இதனால் அவர்களுக்கு தலைச்சுற்றல், மயக்கம் போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கு. அதை தவிர்க்க அப்பப்ப நடந்து கொண்டே இருப்பது சிறந்தது. கனமான பொருட்களை தூக்கும் போது கூட சட்டுன்னு குனிந்து பொருட்களை தூக்காமல், கொஞ்சம் பொறுமையாக குனிந்து பொருட்களை தூக்க வேண்டும். இரவு தூங்கும் போது தலையை சற்று உயரமாக வைத்து, தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் தலைசுற்றலும், தலைவலியும் குறையும். அதைப்போல காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போதும், சட்டுனு எழுந்திருக்காமல் பொறுமையாக எந்திரிச்சு உட்கார்ந்து சில நிமிடங்களுக்குப் பிறகு எந்திரிச்சு நடக்கணும். இதனால குறைந்த ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published.