வெயில், காற்று, மழை, குளிர் என்று காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் உடல் மட்டுமின்றி முடி வளர்ச்சியையும் பாதிக்கிறது.காலநிலையில் ஏற்படும் மாற்றங்களால் முடியானது வறண்டு போகும்.தலைமுடி வறண்டு போவதற்கு காரணம் நீர்ச்சத்து இல்லாமல் இருப்பதே ஆகும்.ஆளி விதை(Flax seeds) மற்றும் வாழைப்பழத்தை ஹேர் பேக் ஆக பயன்படுத்துவதால் முடிக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கும்.
பட்டு போன்ற தலைமுடி கிடைக்க:
வாழைப்பழத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் சத்துக்கள் மற்றும் ஆளி விதையில் உள்ள விட்டமின் இ தலைமுடியில் ஈரப்பதத்தை தக்க வைக்க பெரிதும் உதவும்.
ஆளிவிதை ஹேர்மாஸ்க்:
தேவையானவை:
ஆளி விதை பொடி- இரண்டு ஸ்பூன்
வாழைப்பழம்- ஒன்று
செய்முறை:
முதலில் ஆளி விதை(Flax seeds) மிக்ஸி ஜாரில் அரைத்து பவுடராக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.பின்பு வாழைப்பழத்தையும் மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளவும். அதில் ஆளி விதைப் பொடி 2 ஸ்பூன் எடுக்கவும்.இதனுடன் அரைத்த வாழைப்பழத்தை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.பின்பு அந்த பேஸ்டை தலையில் தேய்க்க வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து தலையை அலசவும்.இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வர முடியானது பட்டுப்போல் மென்மையாக மாறும்,முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.