பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ஐந்து ரஃபேல் Rafale ரக போர் விமானங்கள் இன்று இந்தியாவின் அம்பாலா Ambala விமானப்படைத் தளத்தில் 7000 கிலோமீட்டர் பயணத்துக்குப் பிறகு வந்து சேர்ந்தது.
ரஃபேல் போர் விமானம் இந்திய விமானப்படையின் பலத்தை எவ்வாறு அதிகரிக்கிறது
இந்தியாவிற்கு பாகிஸ்தான் மற்றும் சீனாவிடமிருந்து நேரடியான அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன இந்த நிலையில் இந்தியா தன்னுடைய விமான படையின்Indian air force பலத்தை அதிகரிக்க பிரான்ஸ் நாட்டு நிறுவனமான டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 36 ரஃபேல் ரக விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது ரஃபேல் விமானங்களை பொருத்தவரை 4.5 தலைமுறை விமானம் ஆகும் இது உலகின் தலைசிறந்த விமானங்களில் ஏழாவது இடத்தை வகிக்கிறது இந்த விமானம் ஒரே நேரத்தில் 40 இலக்குகளைக் குறி வைக்கவும் ஒரே நேரத்தில் நான்கு இலக்குகளை தாக்கவும் வல்லது
ரஃபேல் Rafale விமானம் மூலம் இலக்குகளை துல்லியமாக வேகமாகவும் குறிவைத்து ஆயுதங்களை பயன்படுத்த முடியும் ரஃபேல் விமானம் 360 டிகிரியில் சுழன்று தாக்கும் வல்லமை உடையது
ரஃபேல் விமானத்தின் முக்கிய சிறப்பம்சம் ஆனது இது எதிரி நாட்டின் ரேடார் கண்ணுக்குத் தெரியாத வகையில் மிகவும் சிறப்பான வடிவமைப்பு கொண்டதாகும் இதனால் இந்தப் போர் விமானத்தின் மீது தாக்குதல் நடத்துவதும் இதனை கண்டறிவதும் எதிரிகள் நாட்டுக்கு மிகவும் சவாலான விஷயமாகும்
ரஃபேல் விமானம் ஏர் சுப்பீரியாரிட்டி வகை சேர்ந்த விமானம் ஆகும் இதனால் வானில் உள்ள இலக்குகளையும் தரையில் உள்ள இலக்குகளையும் கப்பல்களையும் தாக்கும் திறன் வாய்ந்தது
இரட்டை என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த ரஃபேல் விமானமானது எல்லா கால நிலைகளிலும் மிக சிறப்பாக செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது
ரஃபேல் விமானம் விமானம் மிகவும் உயரத்தில் பறக்கும்போது விமானிகளுக்கு தேவையான ஆக்சிஜனை விமானத்திலேயே உற்பத்தி செய்யும் திறன் பெற்றது
ரஃபேல் விமானத்தின் ஆயுதங்கள்
10 டன் எடை கொண்ட ரஃபேல் விமானங்கள் அதற்கு இணையான ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் பெற்றது
ரஃபேல் Rafale விமானத்துடன் இணைக்கப்பட்டுள்ள அதிநவீன ஏவுகணைகள் 100 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள வான் இலக்குகளை துல்லியமாக அழிக்கும் திறனுடையது மேலும் மற்ற போர் விமானங்களில் இல்லாத காம்பாக்ட் ரேடியஸ் அதிநவீன தொழில்நுட்பம் ரஃபேல் போர் விமானத்தில் உள்ளது
ரஃபேல் விமானத்தில் 14 நடுத்தர ஏவுகணைகளை எடுத்துச் செல்லலாம் அதாவது 70 லிருந்து 200 கிலோமீட்டர் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் மேலும் பிரம்மோஸ் மற்றும் அணு ஆயுத ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறனுடையது
இந்த வகையான ஆர் சுப்பீரியாரிட்டி வகையை சேர்ந்த ரயில் விமானம் இந்திய விமானப் படையில் இணைவது தெற்காசிய நாடுகளில் இந்தியாவின் விமானப் படையின் பலத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது