அத்திப்பழத்தின் நன்மை:
இயற்கை அற்புத பலன்களை தரக்கூடிய பழங்களை நமக்கு பரிசாக வழங்கி உள்ளது.அவற்றில் மிகவும் சிறப்புவாய்ந்த பழம் தான் அத்திப்பழம்.அத்திப்பழம் Fig Fruit என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. அத்தியில் நாட்டு அத்தி,வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பலவகை அத்தி மரங்கள் உண்டு.ஆய்வின்படி மற்ற பழங்களை விட அத்திப்பழத்தில் ப்ரோட்டின்,சர்க்கரை சத்து,கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்பு சத்து,விட்டமின் கே,விட்டமின் ஏ,விட்டமின் சி ஆகியவை அதிக அளவில் உள்ளது.
அத்திப்பழத்தின் பயன்கள்: Fig Fruit
- அத்திப்பழம் fig fruit சாப்பிடுவதால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து உடல் வளர்ச்சி அடையும்.
- அத்திப்பழத்தில் உள்ள கால்சியம் எலும்பை பலப்படுத்த உதவும்.
- அத்திப்பழத்தில் fig fruit உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சினையை சரிசெய்ய உதவும்.
- அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்கவும் உதவும்.
- குடல் இயக்கம் சீராக நடைபெற அத்திபழம் உதவும்.
- இதயநோய் வராமல் தடுக்க அத்திப்பழம் fig fruit பெரிதும் உதவும்.
- அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.
- ரத்த குழாய்களில் சேரும் கொழுப்பை தடுத்த தடுக்க அத்திப்பழம் உதவும்.
- அத்திப்பழத்தில் உள்ள மெக்னீசியம் மாங்கனீசு லிங்க் போன்ற தாதுக்கள் குழந்தை பேரின்மை பிரச்சினையை சரிசெய்ய உதவும்.
- அத்திப்பழத்தில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும்.
- அத்திப்பழம் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்.
- அத்திப்பழத்தில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளதால் ரத்தசோகை ஏற்படாமல் தடுக்க முடியும்.
- உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்ய அத்திப்பழம் உதவும்.
- அத்திப்பழத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் இளமையான தோற்றத்தை தக்க வைக்க உதவும்.
- அத்திப்பழத்தில் உள்ள விட்டமின் ஈ முகத்தை பொலிவுடன் வைக்க உதவும்.
அத்திப்பழத்தில் அதிக அளவு இரும்புசத்து உள்ளதால் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.
அத்திப்பழ ஸ்மூத்தி
அத்தி பழத்தோடு ,அரை கப் பால்,அரை கப் ஆரஞ்சு ஜூஸ் ,நறுக்கிய வாழைப்பழம்,தேங்காய்,பாதாம் பருப்பு சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து கலக்கி பிரிட்ஜ்ல் சிறிது நேரம் வைத்திருந்த பின் இந்த ஸ்மூத்தியை வளரும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் .
தினமும் அத்தி பழம் சாப்பிட்டால் சுறுசுறுப்புடன் இளமையாக இருக்கலாம்.