மைதா(Maida):
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மைதாவால்(Maida) தயாரித்த உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். இன்று உலகில் அதிகம் பேரை பாதித்திருக்கும் நோய்களில் முக்கியமானது சர்க்கரை நோய்(diabetes). அந்த சர்க்கரை நோயை உருவாக்கிய பெருமை மைதாவை சேரும் என்று சொல்லலாம்.
மைதா மாவு தயாரித்தல்:
கோதுமையில்(Wheat) இருந்து தான் மைதா மாவு(Maida) தயாரிக்கப்படுகிறது. கோதுமையில் இருக்கும் சத்துக்கள் நீக்கப்பட்டு அதிலிருந்து மைதாமாவு எடுக்கப்படுவதால் அது பழுப்பு நிறத்தில் இருக்கிறது. இந்தப் பழுப்பு நிறத்தை போக்கி, பளீர் வெள்ளை நிறம் கொடுக்க பென்சைல் பெராக்ஸைடு, குளோரின் போன்ற ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. இந்த ரசாயனங்கள் உடலுக்கு கேடு தரக்கூடியது.
மைதா உணவுகளால் ஏற்படும் ஆபத்துக்கள்:
- பரோட்டா, சமோசா, பிஸ்கட், பீட்சா, நூடுல்ஸ், பேக்கரி உணவுகள் போன்ற பல உணவுகள் மைதா மாவில் இருந்து செய்யப்படுகிறது. இதில் நார்ச்சத்து(Fiber) இல்லாத காரணத்தால் உடலில் மலச்சிக்கல்,செரிமான கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் உருவாகும்.
- மைதா வகை உணவுகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளும்போது உங்கள் இரத்த சர்க்கரை அளவு மிக வேகமாக அதிகரிக்கும்.
- மைதா(Maida) உணவில் அதிக அளவு எண்ணெய் சேர்க்கப்படுவதால் உடலில் கொழுப்பு அதிகமாகி உடல் எடை அதிகரிக்கும். மேலும் இருதய கோளாறு, ரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகளும் உண்டாகும்.
- மைதாவில் நார்ச்சத்து கிடையாது. மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல. மைதா மாவில் செய்யப்படும் உணவுகளால் உடலுக்கு எந்தவிதமான நன்மையும் கிடையாது.