ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதை மிகச் சரியான ஆட்டம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ்(Chennai Super Kings) கேப்டன் மகேந்திர சிங் தோனி கருத்து தெரிவித்துள்ளார்.பெங்களூரு ஆட்டத்தின் வெற்றிக்குப் பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் தோனி(Dhoni)தன்னுடைய கருத்துக்களை தெரிவித்தார்.
சிஎஸ்கே அணியின் உண்மையான வெற்றி இதுதான் என்று புகழ்ந்து தள்ளிய தோனி:
மிகச்சரியான ஆட்டங்களில் இது ஒன்று.நாங்கள் மிகச்சரியாக செயல்படுத்தி ஆடினோம்.சீராக விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பான பணியை செய்தனர்.நடு ஓவர்களில் நாங்கள் விக்கெட்டுகளை வீழ்த்த சிரமப்பட்டோம்.இந்த சீசனில் நாங்கள் சிறப்பாக செயல்படாததற்கு இதுவும் ஒரு காரணம்.
நாங்கள் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இன்று தொடக்கம் சிறப்பாக இருந்தது.ருதுராஜ் சிறப்பாக விளையாடினார்.பெரிய ஷாட்களை ஆடாமல் தன்னால் முடிந்த ஷாட்களை ஆட முயற்சித்து பலம் சேர்த்துக் கொண்டார்.இது இரண்டாவது அல்லது மூன்றாவது ஆட்டத்தில் பார்த்திருந்தால் ஒரு கவனம் கிடைத்திருக்கும்.ஆனால் ருதுராஜ்க்கும் இது கடினமான ஒன்று.அவர் சென்னையில் பேட் செய்தார்.அதன் பிறகு கரோனா தொற்று காரணமாக கூடுதலாக தனிமையில் இருந்ததால் அவரது பொன்னான நேரம் வீணானது.இன்று முதல் ரன்னை எடுத்த பிறகு ஒவ்வொரு ரன்னை எடுத்த போதும் அவர் இயல்பாக உணரத் தொடங்கினார்.
கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும்:
நீங்கள் சரியாக விளையாடும் நிலையில் உங்களின் உணர்ச்சிகள் மேலோங்கியிருக்கும்.ஆதலால் இந்த போட்டியோடு தங்கள் நம்பிக்கையை இளம் வீரர்கள் விட்டுவிடக்கூடாது.கடந்த 12 மணி நேர வலியான நேரத்தை மறந்துவிட்டு, மற்ற போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தோனி குறிப்பிட்டார்.புள்ளிப் பட்டியலில் நாம் மேலே செல்கிறோமா என்பது முக்கியமல்ல.நாம் கிரிக்கெட்டை(Cricket) மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் இல்லாவிட்டால், கிரிக்கெட் வலி நிரம்பியதாக, கொடூரமாக மாறிவிடும்.இளைஞர்கள் விளையாடியதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தோனி (Dhoni)தெரிவித்தார்.