வெள்ளரி அல்வா Cucumber Halwa
நீர்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ள வெள்ளரிக்காயை பயன்படுத்தி வெள்ளரி அல்வா(Cucumber Halwa) எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையானவை:
- வெள்ளரித்துருவல்-4 கப்
- சர்க்கரை-2 கப்
- இனிப்பு கோவா- ஒரு ஸ்பூன்
- நெய்-ஒரு ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய பாதாம்- ரெண்டு ஸ்பூன்
செய்முறை:
கசப்பு தன்மை இல்லாத வெள்ளரிக்காயை தோல் சீவி எடுத்துக் கொள்ளவும்.பின்னர் தோல் சீவிய வெள்ளரிக்காயை துருவி எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு Pan ல் நெய்விட்டு, பாதாமை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்னர் அதே Pan ல் வெள்ளரி துருவலை சேர்த்து பத்து நிமிடங்கள் வதக்கவும்.பின்னர் சர்க்கரை சேர்த்து கிளறவும்.தண்ணீர் முழுவதும் வற்றி, நன்கு சுருண்டு வரும் போது இனிப்பு கோவாவை சேர்க்க வேண்டும்.பின்பு நன்றாக கலக்க வேண்டும்.அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கி விட வேண்டும்.பின்னர் வறுத்து வைத்திருக்கும் பாதாமை தூவ வேண்டும்.சுவையான உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரி அல்வா ரெடி.