Skip to content

CSK VS DC: Chennai super kings அதிர்ச்சி தோல்வி : அக்ஷர் படேல் அசத்தல்!

CSK VS DC

ஐபிஎல் 13 வது சீசன் 34 வது லீக் போட்டியில் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி குவித்ததால் சென்னை அணியை (Chennai super kings) டெல்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

CSK VS DC

டாஸ் வென்ற சென்னை அணி

டாஸ் வென்று முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் ( Chennai super kings) 4 விக்கெட் இழப்புக்கு 179   ரன்கள் எடுத்தது .அதன்பின்பு களமிறங்கிய டெல்லி  கேபிடல்ஸ்(Delhi Capitals)  19.5 ஓவரில்  5 விக்கெட்களை இழந்து  185   ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

CSK VS DC: Chennai super kings அதிர்ச்சி தோல்வி : அக்ஷர் படேல் அசத்தல்!

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.துவக்க வீரரான சங்கரன் ரன் எதுவும் சேர்க்காமலே ஆட்டமிழந்தார்.அடுத்து களமிறங்கிய ஷேன் வாட்சன்  மற்றும் டு பிளஸி  இணை 47 பந்துகளில் 58  ரன்கள் எடுத்தது. வாட்சன் 36 ரன்கள் எடுத்த நிலையில்  பெவிலியன் திரும்பினார்.   பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணியின் கேப்டனாக தோனி(Dhoni) களமிறங்கி   வெறும் 3 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய அம்பத்தி ராயுடு 45 ரன்களும், ஜடேஜா  அதிரடியாக 13 பந்துகளில் 33 ரன்களும்  எடுத்திருந்தார். இறுதியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

180 ரன் எடுத்தால் வெற்றி

அடுத்து களமிறங்கிய டெல்லி அணி 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில்  துவக்கத்திலேயே பெரும் பின்னடைவை சந்தித்தது.தொடக்க வீரரான பிரித்வி ஷா ரன் எதுவும் எடுக்காமலும் ரஹானே 8 ரன்கள் மட்டுமே எடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். வெறும் 26 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து டெல்லி அணி  தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் ஷிகர் தவான் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தார். அடுத்து களமிறங்கிய  ஷ்ரேயஸ் ஐயரும் 23 ரன்களை சேர்த்து, ஆட்டம் அதிரடியாக ஆடிய மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் 14 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்து  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடுமையான நெருக்கடியை  கொடுத்தார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஷிகர் தவான் 38 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்து அசத்தினார்.இதில் 14 பவுண்டரி மற்றும் ஒரு  சிக்சரும்  அடித்திருந்தார்.

கடைசி ஓவரில் 17 பந்துகள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா பந்துவீச அக்சர் பட்டேல் 3 சிக்சர்கள் விளாசி டெல்லி அணி வெற்றி பெற செய்தார். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai super kings) அணியின் மோசமான பீல்டிங் தோல்விக்கு காரணமாக இருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published.