Skip to content

Constipation Remedy in Tamil

Constipation Remedy in Tamil

கடுமையான மலச்சிக்கலை சரி செய்ய உதவும் பழம்:

கடுமையான மலச்சிக்கலை(Constipation) சரி செய்ய நமக்கு பெரிதும் உதவும் பழம் அத்திப்பழம்.(Fig Fruit)அத்திமரம் சுமார் 10 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. அத்திக்காய்கள்   ஒவ்வொரு இலைகளுக்கு மேலேயும் கொத்துக்கொத்தாக வரும். பெரிய நெல்லிக்காய்  அளவில் அத்திப்பழம்  வளரும். அத்திக்காய் பழுத்த பின்பு  மஞ்சள் நிறமாக மாறும்.

அத்திப்பழத்தில்(Fig Fruit)   கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டின், இரும்புச்சத்து  ஆகிய சத்துக்கள் அதிகளவில் உள்ளன. மற்ற பழங்களை விட இந்த சத்துக்கள் அத்திப்பழத்தில் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. மேலும் விட்டமின் சி, விட்டமின் ஏ போன்ற சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன.

 அத்திப்பழத்தின் பயன்கள்

  • அத்திப்பழத்தை சாப்பிட்டு வர உள்மூலம், வெளி மூலம் ,குடல் தள்ளல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
  •  அத்தி மரத்தின் காய், பிஞ்சு,  பட்டை ஆகியவை  நரம்பு, சதை ஆகியவற்றை சுருங்கச்  செய்ய உதவும். வயிற்றுக்கடுப்பு, சீதக்கழிச்சல், நீரழிவு  நோயினால் உண்டாகும் உடல் வெப்பம், நாவறட்சி, தாகம் ஆகியவற்றை சரிசெய்ய அத்திபழம் உதவும்.
  • ரத்தத்தை சுத்தப்படுத்த அத்திப்பழம் பெரிதும் உதவும்.
  •  மூட்டு வீக்க பிரச்சனையை சரிசெய்ய அத்திப்பழம் பெரிதும் பயன்படும்.
  •  நீரிழிவு நோயினால் உண்டாகும் புண்களை ஆற்ற அத்திப்பழம் பெரிதும் உதவும்.

மலச்சிக்கல் பிரச்சனை தீர அத்திப்பழங்களை எவ்வாறு சாப்பிட வேண்டும்?

உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த அத்திப்பழங்களை எடுத்து சாப்பிட வேண்டும். பின்னர் அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்கலாம். இவ்வாறு செய்து வர கடுமையான மலச்சிக்கலும்(Constipation) நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published.