காபி பவுடர் பேஸ் பேக்:
முகம் இளமையாகவும் பொலிவுடன் இருக்க வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆசை. அதற்காக பல்வேறு கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். அதன் காரணமாக முகமானது பாதிக்கப்படுகிறது. அதை தவிர்க்க வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முகத்தை அழகாக்கலாம். காபி(Coffee) பொடியை காபி போட மட்டுமல்லாமல் முக அழகிற்காகவும் பயன்படுத்தலாம். காபி பொடி சருமத்திலுள்ள கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து சருமம் என்றும் பொலிவுடன் இருக்க உதவும். இதன் காரணமாக தளர்ந்த சருமம் மீண்டும் இறுகி புதுப்பொலிவுடன் காணப்படும். சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்க காபி பொடி பெரிதும் பயன்படும். முகத்திற்கு ஸ்க்ரப்பர் ஆக காபி பொடியை பயன்படுத்தலாம். கெமிக்கல் கலந்த ஸ்க்ரப்பர் பயன்படுத்தும்போது முகத்திற்கு கெடுதல் ஏற்படும். ஆனால் காபி பொடியை பயன்படுத்தும்போது எந்த கெடுதலும் ஏற்படாது. காபி பொடி முகத்திற்கு இயற்கையான பொலிவை தரும் தன்மை கொண்டது.
இறந்த செல்கள் நீங்க:
காபி பவுடர், சர்க்கரை இரண்டையும் சமமாக கலந்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அந்த கலவையை முகத்தில் தேய்க்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். முகத்தில் உள்ள இறந்தசெல்கள் நீங்கி முகமானது பொலிவாக மாறும்.
கண் வீக்கம் குறைய:
காபி ரத்த ஓட்டத்தை அதிகரிக்க பெரிதும் உதவும். கண்களுக்கு கீழே ஏற்படும் வீக்கத்தை குறைக்க காபி பொடி பெரிதும் பயன்படும். காபி பொடியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கண் வீக்கத்தை குறைக்க உதவும்.
வறட்சியான சருமம் நீங்க:
காபி(Coffee) பொடியை முகத்திற்கு பயன்படுத்தி வர வறட்சியான சருமம் நீங்கி சருமம் மென்மையாக மாறும்.
முகம் பளிச்சென்று மாற:
காபி பொடியை சிறிதளவு கடலைமாவுடன் சேர்த்து கலக்க வேண்டும். பின்பு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். பின்பு அந்த கலவையை முகத்தில் தேய்க்கவேண்டும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். பின்னர் முகமானது பளிச்சென்று மின்னும்.
வயதான தோற்றத்தை தடுக்க:
காபி(Coffee) பவுடர் சிறிதளவு கற்றாழை உடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்பு அந்த கலவையை முகத்தில் தேய்த்து நன்றாக மசாஜ் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்து வர முகமானது என்றும் இளமையுடன் இருக்கும்.
சிறந்த ஸ்கிரப்பர்:
காபி பொடியுடன் ஆலிவ் ஆயில் மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அந்த கலவை முகத்தில் நன்றாக ஸ்கிரப் செய்ய வேண்டும். காப்பி பொடி சருமத்திற்கு ஏற்ற சிறந்த ஸ்கிரப்பர் ஆக செயல்படும்.
முகமானது மின்னுவதற்கு:
காபி பவுடர் சிறிதளவு எலுமிச்சைச்சாறுடன் கலந்து முகத்தில் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்து வர முகமானது மின்னும்.
சரும சுருக்கங்கள் மறைய:
காபி பொடியுடன் சிறிதளவு காய்ச்சாத பால், சிறிதளவு கசகசா பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் இந்த கலவையை முகத்தில் தேய்க்க வேண்டும். இந்த கலவையை பயன்படுத்தி முகத்தில் ஸ்கரப் செய்யும் போது முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் வெண்மையாக மாறும். முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்க காபி பொடி பெரிதும் உதவும்.
சருமம் மென்மையாக:
காபி பவுடருடன் சிறிதளவு தேன் கலந்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அந்த கலவையை முகத்தில் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்து வர சருமமானது மென்மையாக மாறும்.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய:
காபி பவுடருடன் காய்ச்சாத பால் சிறிதளவு எடுத்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அந்த கலவையை முகத்தில் தேய்க்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.