கோடையின்(Summer) வெப்பத்தால் ஏற்படும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்க தேங்காய் வெல்ல பால் உதவும்.தேங்காய் வெல்ல பால் எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
தேங்காய் வெல்ல பால் Coconut Milk Recipe:
தேவையானவை:
தேங்காய்த்துருவல்- ஒரு கப்
வெல்லத்தூள்- அரைக் கப்
கசகசா- ஒரு ஸ்பூன்
ஏலக்காய்த்தூள்- சிறிதளவு
செய்முறை:
முதலில் மிக்ஸியில் தேங்காய் துருவலுடன் கசகசா மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலுடன் அரைக் கப் வெல்லத்தை சேர்க்கவும்.பின்பு சிறிதளவு ஏலக்காய் தூளை சேர்க்க வேண்டும்.பின்னர் நன்கு கலக்கவும்.சுவையான சத்துக்கள் நிறைந்த தேங்காய் வெல்ல பால் ரெடி.