CSK VS MI சிஎஸ்கே அணி அதிர்ச்சி தோல்வி:
துபாயில் இன்று நடைபெற்ற சிஎஸ்கே (CSK)மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான டி20 போட்டியில் சென்னை அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.சிஎஸ்கே அணியின் ஓபனர் முதல் தொடங்கி மிடில் ஆர்டர் வீரர்கள் வரை அனைவருமே வரிசையாக அவுட்டாகி ரசிகர்களின் அதிர்ச்சிக்குள்ளாகினார்கள்.
மும்பைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வெற்றி பெற்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.களமிறங்கிய சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
Chennai Super Kings:
சென்னை அணி ஏழு ஓவர் முடிவதற்கு உள்ளாக வரிசையாக 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.முதல் ஓவரிலேயே ருத்ராஜ் அவுட்டானார்.அதற்கு அடுத்த ஓவரிலேயே அம்பத்தி ராயுடு மற்றும் ஜெகதீசன் இருவருமே அடுத்தடுத்து அவுட் ஆகினர்.முதல் ஓவரிலேயே போல்ட் விக்கெட் எடுக்க,அதுக்கு அடுத்த ஓவரில் பும்ரா விக்கெட் எடுத்து இருந்தார்.
போல்ட் தனது மூன்றாவது மற்றும் ஐந்தாவது ஓவர்களில் அடுத்தடுத்து டுப்லஸ்ஸிஸ் மற்றும் ஜடேஜா இருவரையும் அவுட் ஆக்கினார். தொடர்ந்து விழுந்த விக்கெட்டுகள் சிஎஸ்கே அணியை ஒட்டுமொத்தமாக உடைத்துப் போட்டது.
ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த தோனி சிக்ஸ் எடுத்த கையோடு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
சிஎஸ்கே அணியின் முன் வீரர்கள் மொத்தமாக சொதப்பியது மிடில் ஆர்டரின் சரிவுக்கு காரணமாக இருந்தது.சிஎஸ்கே அணியில் வாய்ப்பு கிடைத்த ஜெகதீசன், ருத்ராஜ் இரண்டு பேருமே சரியாக ஆடவில்லை.அருமையான வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்திக் கொள்ளாமல் இருவருமே டக்கவுட் ஆனது மிகவும் மோசமானதாக இருந்தது.
தோல்விக்கு காரணம்:
சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி(dhoni) இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை என்று இதைத் தான் கடந்த போட்டியில் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.இருந்தபோதும் சிஎஸ்கே நிர்வாகம் முக்கியமான வீரர்களை அணியில் இருந்து எடுத்துவிட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது தான் இந்த தோல்விக்கு காரணமாக அமைந்தது.
வாட்சன் போன்ற வீரர்களை நீக்குவதில் தோனிக்கு விருப்பமில்லை இருந்தபோதிலும் அணி நிர்வாகம் இதை மீறி அணியில் வாட்சன் போன்ற திறமையான வீரர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்களை கொண்டு வந்திருந்தார்கள் இதன் விளைவாக வரலாறு காணாத தோல்வியை சிஎஸ்கே அணி சந்தித்தது.
#MumbaiIndians WIN by 10 wickets.#Dream11IPL pic.twitter.com/NeUUpWME7I
— IndianPremierLeague (@IPL) October 23, 2020