நாளை வானில் நடக்கப்போகும் விந்தை:
வானில் நிகழும் பல்வேறு அதிசயங்களில் ஒன்றுதான் நீல நிலா. நீல நிலா என்றால் நீல நிறத்தில் இருக்கும் என்று பொருள் கிடையாது.இதுவரை நீங்கள் பார்த்த முழுநிலா(பௌர்ணமி நிலா) மிகப் பெரியதாகவும் குற்றம் குறை இல்லாமல் முழுதாக தெரியும் அவ்வளவுதான்.அப்படிப்பட்ட முழுநிலா நாளை வானில் தோன்ற உள்ளது.
Blue Moon:
ப்ளூ மூன்(Blue Moon) என்றழைக்கப்படும் நீல நிலவானது நாளை ஏற்பட உள்ளது.இந்த நீல நிலவை இப்போது பார்க்கத் தவறினால் மீண்டும் வரும் 2023 ஆம் வருடத்தில் மட்டுமே காணமுடியும்.
பௌர்ணமி:
பவுர்ணமியின் நேரத்தினை பொ றுத்து ஏற்படும் மாறுபாடு ப்ளூ மூன் என்றழைக்கப்படுகிறது.மேலும் ஒரே மாதத்தில் 2 பவுர்ணமி ஏற்படும் தருணத்தில் இரண்டாவதாக ஏற்படும் பௌர்ணமி ப்ளூ மூன் என்றழைக்கப்படும்.இந்த ப்ளூ மூன் இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை சராசரியாக வரும்.இவை அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய கண்ட மக்களால் எளிதில் காண இயலும். இந்த ப்ளூ மூன் வரும் 2023 ஆம் வருடத்தின் ஆகஸ்ட் 31 ஆம் தேதியிலும், 2026 ஆம் வருடம் ஆகஸ்ட் 31ம் தேதியும், 2028 ஆம் வருடம் டிசம்பர் 31ம் தேதியும் தோன்றக் கூடியது.