வானில் விசித்திரமான நிகழ்வு:
வானில் மிகவும் அரிய நிகழ்வான சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது.சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் போது பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும்.இந்த நிகழ்வு சந்திர கிரகணம் என்றழைக்கப்படும்.நாளை சந்திர கிரகணம் இந்திய நேரப்படி மதியம் 2.15 முதல் இரவு 7.20 மணி வரை நிகழ்கிறது.
ஆசியாவில் இருக்கும் நாடுகளான ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, பசுபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல், அண்டார்டிகா போன்ற பகுதிகளிலிருந்து சந்திர கிரகணத்தை காணலாம்.
ரத்த நிலா (Blood Moon):
பூமிக்கு நெருக்கமாக நிலா வரும்போது வளிமண்டல ஒளிச்சிதறல் காரணமாக ரத்த சிவப்பு நிறத்தில் நிலா தோன்றும்.இந்த நிகழ்வு ரத்த நிலா(Blood Moon) என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் முழு சந்திர கிரகணத்தின் ஒரு பகுதி அல்லது புறநிழல் சந்திரகிரகணம் ஆக இந்த நிகழ்வு தெரியும். இந்த நிகழ்வை அனைத்து பகுதிகளிலும் இருந்து காண இயலாது.