பிக்பாஸ் வீட்டிற்குள் Wildcard Entry ஆக விஜய் பட நடிகை?
பிக்பாஸ்(BigBoss)நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதலில் பதினாறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதன் பின் ரேகா, வேல்முருகன் ஆகிய இரண்டு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர்.அர்ச்சனா மற்றும் சுசித்ரா ஆகிய இருவரும் Wildcard போட்டியாளராக உள்ளே நுழைந்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது Wildcard போட்டியாளர் இவர்தான்:
தற்போது பிக்பாஸ் வீட்டில் 16 பேர் உள்ளனர்.இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மூன்றாவது Wildcard என்ட்ரி ஆக விஜய் பட நடிகை ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானது.விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான பிகில் படத்தில் பாண்டியம்மாள் என்ற கேரக்டரில் நடித்த இந்திரஜா என்பவர் தான் மூன்றாவது Wildcard போட்டியாளர் என்று கூறப்படுகிறது. இவர் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள்.ஏற்கனவே சனம் செட்டி- பாலாஜி, ஆரி- அர்ச்சனா என பல்வேறு பிரச்சினைகளும் அங்கே நிலவி வருகிறது.இதுவரை இல்லாத குருபீசம், ஃபேவரிசம் போன்ற தந்திரங்களை பயன்படுத்தி போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடி வருகின்றனர்.இப்போது செல்ல இருக்கும் இந்திரஜா பிக்பாஸ் வீட்டில் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.