பிக்பாஸ்(BigBoss) வீட்டுக்குள் மூன்றாவது Wildcard Entry ஆக சின்னத்திரை நடிகர் அசீம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலாவது Wildcard Entry ஆக தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டுக்குள் வந்தார்.அதன்பின்பு இரண்டாவது Wildcard Entry ஆக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார்.தற்போது மூன்றாவது Wildcard Entry ஆக சின்னத்திரை நடிகர் அசீம் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சிவானிவுடன் இணைந்து பகல் நிலவு சீரியலில் நடித்திருந்தார்.
பாலாஜிக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே உள்ள பிரச்சனை:
பாலாஜி முருகதாஸ் சனம் செட்டி பற்றி பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிப்படுத்தி வந்ததால் சனம் ஷெட்டிக்கும் பாலாஜிக்கும் இடையே பெரிய பிரச்சனை நிலவி வருகிறது. பாலாஜி கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் காரணமாக அவரை பிக்பாஸ் ரெட் கார்டு கொடுத்த அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.அவர் வெளியே சென்றதும் மூன்றாவது Wildcard Entry ஆக அசீம் ஐ பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.