Skip to content

BigBoss Season 4 Tamil Day18 Promo

BigBoss Season 4 Tamil Day18 Promo

குரூப்பிசம் செய்கிறார் ரியோ:

இன்றைய  ஸ்டார் விஜய் பிக்பாஸ் சீசன் 4 தமிழ்  முதல்   புரோமோவில் ரம்யா பாண்டியன் மற்றும் ரியோ இருவரும்    குரூப்பிசம்  பற்றி பேசி சண்டை போடுகின்றனர்.பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து ரியோ மற்றும் நிஷா உள்ளிட்ட சிலர் ஒரு அணியாக உள்ளனர்.இதனால் ரியோ  குரூப்பிசம் செய்கிறார் என்று சுரேஷ் முன்னதாக குற்றம் சாட்டியிருந்தார்.ஆனால் அதை மறுத்த ரியோ குரூப்பிசம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டார்.ஆனால் ரியோ தனக்கென ஒரு குரூப் வைத்துக்கொண்டு செயல்படுவதாக சில போட்டியாளர்கள் கூறிவந்தனர்.

BigBoss Season 4 Tamil Day18 Promo

இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வில் ரியோ “உங்கள் காலில் விழுகிறேன் அனைவரும் ஒன்றாக சாப்பிடலாம் என்று குறிப்பிடுகிறார்,இல்லையென்றால் குரூப்பிசம்  செய்வதாக கூறுகிறீர்கள்” என்று  ஆஜித், சிவானி மற்றும் ரம்யா பாண்டியனைப் பார்த்து கேள்வி கேட்கிறார்.அதற்கு ரம்யா பாண்டியன் கோபப்பட்டு பேசுகிறார்.அப்படியானால் குரூப்பிசம் பற்றி யோசித்துதான் எங்களை அழைத்தீர்கள் என்பது எங்களுக்கு தெரியாது என்றும் நீங்கள்தான் குரூப்பிசம் பற்றி பேசுகிறீர்கள் என்று கோபமாக பேசினார் ரம்யா பாண்டியன்.இதுதான் இன்றைய முதல் ப்ரோமோ .

வெளியில் இருப்பவர்கள் செருப்பால் அடிப்பாங்க:

இன்றைய இரண்டாவது புரோமோ சற்று முன் வெளியாகியுள்ளது. இரண்டாவது புரோமோவில்  பிக்பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார்.  இதில் போட்டியாளர்கள் 2 அணிகளாக பிரிந்து பட்டிமன்றம் நடத்த வேண்டும்  என்பதே அந்த டாஸ்க் ஆகும்.பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம் ஒரு அணியினர் பேச வேண்டும் மற்றொரு அணியினர் பிக்பாஸ் ஒரு போட்டிக் களம் என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்த வேண்டும்.

 

ஆனந்த குடும்பத்தில் வேல்முருகன் முதலாவதாக பேசுகிறார்.அப்போது அவருக்கு எதிர்ப்பாளராக அனிதா சம்பத் தன்னுடைய கருத்தினை பேசுகிறார்.அதன் பின்னர் ரியோ பிக்பாஸ் வீடு ஒரு போட்டிக் களம் என்று கூறுகிறார்.எல்லோரும் தேவைக்காகத்தான் இந்தப் போட்டிக்கு வந்திருக்கிறோம் என்று  ரியோ குறிப்பிட்டார்.

இறுதியாக பேசிய நிஷா புறணி பேசுவது அழகு என்று கூறுகிறார். ஒருவரின் உருவத்தையும் உள்ளத்தையும்   உடைக்கும்போது தான் அந்தப் புறணி அசிங்கம் என்று குறிப்பிடுகிறார்.அந்த புறணியை தான் வெளியில் இருப்பவர்கள் செருப்பால் அடிப்பாங்க என்று குறிப்பிடுகிறார். இதுதான் இன்றைய இரண்டாவது ப்ரோமோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *