நான் குழந்தை இல்லை,கல்யாணம் ஆயிடுச்சு,எல்லா நியூசும் படிப்பேன் – அனிதா சம்பத்:
Eviction நாமினேஷன், சிறிய சண்டைகள் என பிக்பாஸ் பதினைந்தாம் நாள் கலகலப்புடன் இருந்தது.புதிய கேப்டன் ரியோ வேலைகள் செய்ய Team பிரித்து விட்டார்.சுரேஷ் சக்கரவர்த்தி கை கழுவும் சிங்கில் துணி துவைத்தார்.அதற்கு சனம் ஷெட்டி கை கழுவும் சிங்கில் துணி துவைக்காதீங்க என்று சொன்னார்.சுரேஷால் Back Pain காரணமாக குனிந்து துணி துவைக்க முடியவில்லை.ஆனால் சனம் ஷெட்டி அந்த சிறிய பிரச்சினையை வெகுநேரம் பேசி பெரிதாக்கினார்.
Eviction ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்:
நாமினேஷன் பகுதியில் சென்ற வார டாஸ்கில் வென்றதால் சனம் ஷெட்டி மற்றும் வேல்முருகன் இருவரையும் நாமினேட் செய்ய முடியாது.மேலும் அர்ச்சனாவிற்கு முதல் வாரம் என்பதால் அவரையும் நாமினேட் செய்ய முடியாது.கேப்டன் என்பதால் Rio வையும் நாமினேட் செய்ய முடியாது.இந்த வார Eviction ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி, அனிதா சம்பத், ஆஜித், பாலாஜி ஆகியோர் ஆவர்.நாமினேஷன் ல் தனது பெயர் வந்ததும் “இந்த வாரம் நான் தான் Eviction ஆவேன்” என அழுது கொண்டிருந்தார் அனிதா சம்பத்.
“சொல்றியா செய்யறியா” :
பிக்பாஸ் டாஸ்க்(Task) ஒன்றை கொடுத்தார்.போட்டியாளர் முகங்கள் அடங்கிய வீல் ஒன்றை கொடுத்தார்.அந்த விளையாட்டின் பெயர்” சொல்றியா செய்யறியா“.
நாமினேஷன் ஆன ஐவரும் ஒரு டீம், மற்றவர்கள் அனைவரும் இன்னொரு டீம்.அந்த விளையாட்டில் நிஷா சிம்ப்ளி வேஸ்ட் என்ற விருதை வேல் முருகன் மற்றும் ஷிவானிக்கு கொடுத்தார்.சுரேஷுக்கும் Rio வுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது சுரேஷ் பிக்பாஸ் இடம் சென்று “பிக்பாஸ் நல்ல கொளுத்தி போட்டீங்க” என்று கூறினார்.
மறுபடியும் கேம் தொடங்க, கேப்ரியல் வேல்முருகன் பெயரை குறிப்பிட வேல்முருகன் கோபப்பட்டு சத்தம் போடத் தொடங்கினர். ஒரு மனுஷன் அமைதியாக இருந்த எல்லோரும் என்னையே சொல்லுவீங்களா என்று கோபப்பட்டார் வேல்முருகன். பின்பு அவரை அர்ச்சனா சமாதானப்படுத்தினார். அது ஒருபுறமிருக்க மறுபுறத்தில் ஆரி மற்றும் Rio இருவரும் தான் பேசுவதை கேட்கவே இல்லை என அனிதா சம்பத் கோபப்பட்டு சத்தம் போட ஆரம்பித்தார்.” நான் குழந்தை இல்லை கல்யாணம் ஆயிடுச்சு எல்லா நியூசும் படிப்பேன்” என்னை பேச விடுங்க என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.இப்படியாக பிக் பாஸ் பதினைந்தாம் நாள் கலகலப்புடன் முடிவடைந்தது.