பிக்பாஸ்(BigBoss) நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களுக்கு சுரங்கத்திலிருந்து தங்கத்தை எடுக்கும் டாஸ் கொடுக்கப்பட்டது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஸ்பெஷலாக தங்கசுரங்க அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த டாஸ்கில் போட்டியாளர்கள் நான்கு பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து தங்கத்தை சேகரிக்க வேண்டும்.அந்த போட்டியில் போட்டியாளர்கள் அலாரம் ஒலிக்கும் போது உள்ளே போக வேண்டும், மீண்டும் அலாரம் ஒலித்தவுடன் வெளியே வரவேண்டும் என்பதுதான் அதன் விதிமுறை.
நீ யார் எங்களை சொல்ல? நீயும் போட்டியாளர் தானே?
பாலாஜி,சம்யுக்தா உள்ளிட்ட நான்கு பேர் ஒரு குழுவாக தங்க சுரங்கத்துக்குள் சென்றனர்.அப்போது சனம் ஷெட்டி பாலாவை துணியை எடுத்துக்கொண்டு உள்ளே செல்லக்கூடாது என்று கூறினார்.ஆனால் அதையெல்லாம் கேட்காமல் உள்ளே சென்றார் பாலாஜி மற்றும் அவருடைய குழுவினர்.அதன் பிறகு வெளியே வந்த பாலாஜி, நீ ஏன் என்னை தடுத்த என சனம் செட்டி இடம் கேட்டார்.அதற்கு சனம் செட்டி இது சரி இல்லை என்று கூறினார்.தொடர்ந்து பேசிய சனம் செட்டி விதிமுறையில் இது இல்லை என்றார்.அப்போது நீ மட்டும் இதையெல்லாம் எடுத்துப் போகிறாய் என அவர் கையில் இருந்த கூடையை குறிப்பிடுகிறார்.மேலும் நீங்கள் செய்தால் சரி மற்றவர்கள் செய்தால் தவறா என்று வினவுகிறார் பாலா.தொடர்ந்து பேசிய சம்யுத்தா நீ யார் எங்களை சொல்ல? நீயும் போட்டியாளர் தானே? ஏன் எங்களை சொல்கிறாய்.என்ன நடந்தாலும் அதில் நீ பேச வேண்டும்.அதில் நீ தலையிட வேண்டும் என சனம் ஷெட்டியை வெளுத்து வாங்கினார் சம்யுக்தா.
ஆரியின் தங்கத்தை எடுத்த தாத்தா,பங்கு கேட்ட ஆஜித்,போட்டுக்கொடுத்த சிவானி:
தங்கம் சேகரிக்கும் டாஸ்க் இன் போது ஆரி சேகரித்து வைத்த தங்கத்தை நைசாக திருடி விட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி.பிக்பாஸ் வீட்டில் அதிகமாக தங்கம் சேகரிக்கும் போட்டியாளருக்கு மிகப்பெரிய பலன் கிடைக்கும் என்று கூறினார் பிக் பாஸ்.இதனைத் தொடர்ந்து போட்டி போட்டுக்கொண்டு தங்கத்தை எடுத்தனர் போட்டியாளர்கள்.தங்கத்தை ஓடி ஓடி எடுத்த களைப்பில் பெட்டில் தங்கத்தை வைத்துக் கொண்டு தூங்கி விட்டார் ஆரி.அதனைப் பார்த்த சுரேஷ் சக்ரவர்த்தி நைஸாக அதைத் திருடி விட்டார்.அவருடன் ஆஜித் மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரும் கூட்டாக சேர்ந்தனர்.தொடர்ந்து தங்கத்தை பாத்ரூமில் ஒளித்து வைத்தார் தாத்தா.அப்போது அவரைத் தொடர்ந்து வந்த ஆஜித் தனக்கும் பாதி பங்கு வேண்டும் என்று கேட்டார்.அதற்கு கட்டாயம் தருகிறேன் என்றார் சுரேஷ் சக்கரவர்த்தி.பின்னர் தனது தங்கம் திருடப்பட்டது அறிந்த ஆரி கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்த சிவானி இடம் யார் என் தங்கத்தை எடுத்தது என்று கேட்டார்.அதற்கு தாத்தாவும் ஆஜித்தும் தான் என்று கூறினார் சிவானி.மேலும் யார் பிரித்து கொண்டது என்று தெரியாது.ஆனால் அவர்கள் தான் எடுத்தார்கள் என்று ஷிவானி கூறினார்.
Promo:1
இன்றைய முதல் பிரமோவில் அர்ச்சனாவுக்கும் பாலாஜிக்கு இடையே பெரிய வாக்குவாதம் நடக்கிறது.அதில் ரியோ, நிஷா, வேல்முருகன் ஆகியோரும் பாலாஜிக்கு எதிராக பேசுகின்றனர்.கார்டன் ஏரியாவில் அமர்ந்து பாலாஜி அழுகிறார் இது தான் இன்றைய முதல் பிரமோ.
#Day24 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/xZax59oI0I
— Vijay Television (@vijaytelevision) October 28, 2020