பிக்பாஸ்(BigBoss)நிகழ்ச்சியில் நேற்று விஜயதசமி பூஜை என்பதால் பிக்பாஸ் வீடு நேற்று வண்ணமயமாகவும் கலகலப்பாகவும் இருந்தது.விஜயதசமி பூஜை தொடங்குவதற்கு முன்பு நாமினேஷன் (Nomination)நடந்தது.இந்தவார நாமினேஷன் சற்று வித்தியாசமாக இருந்தது.தனக்கு பிடிக்காத போட்டியாளர்களின் போட்டோக்களை தீயில் போட்டு எரிக்க வேண்டும் என்பதே இந்த வார நாமினேஷன் முறையாகும்.நேற்றைய நாமினேஷன் இல் பதினோரு பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம் சேகர், ரியோ, பாலாஜி ,ஜித்தன் ரமேஷ் ,வேல்முருகன் ஆகிய போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.நாமினேஷன் (Nomination) இல் சிக்காத போட்டியாளர்கள் அர்ச்சனா, சம்யுக்தா,ஆரி,கேப்ரில்லா,ஷிவானி ஆகியோர் ஆவர்.அர்ச்சனா இந்த வார கேப்டன் என்பதால் அவரை யாரும் நாமினேட் செய்யமுடியவில்லை.
நாமினேஷன்(Nomination):
பிக்பாஸில் சம்யுக்தா இரண்டு போட்டியாளர்களை நாமினேட் செய்தார்.முதலில் அனிதாவை நாமினேட் செய்த சம்யுக்தா அதற்கான காரணத்தையும் கூறினார். அதாவது அனிதா ரொம்ப எமோஷனல் கேரக்டராக உள்ளார். எல்லாவற்றுக்கும் ஓவர் ரியாக்டிங் செய்து வருகிறார்.கமல் சார் வந்த ஓபன் டிஸ்கஷனில் கூட அவரை பற்றி ஏதாவது சொன்னால், உடனே எல்லார்கிட்டயும் அதைப் பற்றி டிஸ்கஸ் செய்கிறார்.அந்த இடத்தையே நெகட்டிவ் ஆக மாற்றுகிறார்.தொடர்ந்து ரியோவை நாமினேட் செய்த சம்யுக்தா அவர் கேப்டன் ஆக இருந்த போது பாரபட்சமாக சிலரிடம் நடந்து கொண்டதாக சம்யுக்தா கூறினார்.அவருக்கு வேண்டியவர் தப்பு செய்தால்கூட தட்டிக் கேட்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
Promo :1
இன்றைய முதல் பிரமோ வில் அனிதா சம்பத் தான் லோன்லியாக(Lonely) இருப்பதாக பீல் பண்றேன் என்று அழுதவாறு கூறுகிறார்.மேலும் நான் Funny ஆக கூறுவதை சிலர் தவறாக புரிந்து கொள்கின்றனர்.என்னுடைய கருத்துக்கு யாரும் ஆதரவு தரவில்லை. எனக்கு பிடித்தவர்கள் கூறுவதை கேட்கவா அல்லது நான் நினைப்பதை செய்வதா என்று என் மனது போராட்டமாகவே உள்ளது என்று அனிதா சம்பத் அழுத வண்ணம் பிக் பாஸ் கன்பஷன் Room ல் பிக்பாஸ் இடம் கூறுகிறார்.இதுதான் இன்றைய முதல் பிரமோ.
#Day23 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/6Q0nvgRFOX
— Vijay Television (@vijaytelevision) October 27, 2020
Promo :2
#Day23 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/m3XbHpWQMm
— Vijay Television (@vijaytelevision) October 27, 2020