இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் எவிக்சன் இல்லை:
பிக்பாஸ்(BigBoss) வீட்டில் இந்த வாரம் எவிக்சன் இல்லை என்று தெரியவந்துள்ளது.பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் ஆனவர்கள் ஆரி, ஆஜித், அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி, பாலாஜி ஆகியோராவர். பாலாஜி நேற்று காப்பாற்றபட்டதாக கமலஹாசன் அறிவித்தார்.
இன்று மீதி இருக்கும் நால்வரில் ஒருவர் வெளியேற வேண்டிய நிலை உள்ளது. நால்வருக்கும் கிடைத்த வாக்குகள் அடிப்படையில் குறைந்தபட்ச வாக்குகளை பெற்றவர் ஆஜித்.அதனால் அவர்தான் வெளியேற்றப்பட வேண்டும்.ஆனால் அவரிடம் எவிக்சன் பிரீபாஸ் இருப்பதால் பிக் பாஸ் ஆஜித்தை வெளியேற்ற இயலாது.இதன் காரணமாக இந்த வாரம் எவிக்சன் இல்லை என்று பிக்பாஸ் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த வாரம் பாடகி சுசித்ரா Wildcard Entry ஆக வரவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் அது அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Promo 1:
இன்றைய முதல் ப்ரமோவில் கமலஹாசன் ஆஜித்திடம் யார் வெளியேற உள்ளார் என்று நீங்கள் முன்னரே கணிப்பிர்களா? என்று கேட்கிறார்.அதற்கு ஆஜித் எனக்கு என் மீது தான் நம்பிக்கை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.அதற்கு கமலஹாசன் உங்களுடைய இந்த கணிப்பு சரியா என்று பார்க்கலாம் என்று கார்டை ஓபன் செய்கிறார்.இதுதான் இன்றைய முதல் பிரமோ.
#BiggBossTamil இல் இன்று.. #Day21 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/QXSxSlpxoc
— Vijay Television (@vijaytelevision) October 25, 2020
Promo 2:
அடுத்த ப்ரமோ கமலஹாசன் இன்றைய நாமினேஷன் இல் இருப்பவர்களை ஒன்றாக சேர்ந்து உக்கார சொல்கிறார்.அப்போது அனிதா சம்பத் தனக்கு ஸ்பேஸ் இல்லை என்று குறிப்பிடுகிறார் அதற்கு கமலஹாசன் அனிதா சம்பத் முன்னதாக கூறிய “என்னை யாரும் பேச அனுமதிப்பதில்லை “இந்த வார்த்தையை சுட்டிக்காட்டி ஆமாம் ஸ்பேஸ் இல்லை என்று கூறி ஸ்பேஸ் இல்லை என்று கூறுவார்கள் தான் ஸ்பேஸ் விடாமல் பேசுகிறார்கள் என்று அனிதா சம்பத்தை கிண்டலடிக்கிறார். அதற்கு அனிதா சம்பத் கமல்ஹாசனிடம் நீங்கள் கூறும் அனைத்தும் என்னை கலாய்ப்பது போன்று தெரிகிறது என்று கூறியுள்ளார். இது தான் இன்றைய இரண்டாவது பிரமோ.
#BiggBossTamil இல் இன்று.. #Day21 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/USJGaL6QyV
— Vijay Television (@vijaytelevision) October 25, 2020