அர்ச்சனா போட்டியாளரா அல்லது தொகுப்பாளரா?
பிக்பாஸ்(BigBoss) தொடங்கிய பத்து நாட்களுக்குப் பிறகு தான் அர்ச்சனா(Archana) Wild Card Entry ஆக வந்தார்.நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை 1 முதல் 16 வரை வரிசைப்படுத்த வேண்டும் என்ற டாஸ்க் வழங்கப்பட்டது.அதில் அர்ச்சனா தான் தொகுப்பாளர் போன்று நின்று வாக்கெடுப்பை நடத்தி போட்டியாளர்களின் Rank ஐ தீர்மானித்தார்.அந்த task ல் அர்ச்சனாவுக்கும் பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அர்ச்சனா அந்த டாஸ்கில் தொகுப்பாளர் போல் நடந்துகொண்டதால் பார்வையாளர்கள் நீங்கள் போட்டியாளரா அல்லது தொகுப்பாளரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
யார் ஆக்டிவாக இருந்தார்கள் , யார் ஆக்டிவாக இல்லை?
நேற்றைய பிக்பாஸில் இந்த வாரம் முழுவதும் யார் ஆக்டிவாக இருந்தார்கள் , யார் ஆக்டிவாக இல்லை என கேட்டார்.அதற்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் ஆரி மற்றும் ஆஜித் ஆக்டிவாக இல்லை என்று கூறினர்.ஆரம்பத்தில் சனம் சட்டியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த பாலாஜி தற்போது சனம் ஷெட்டிக்கு ஆதரவு தருகிறார்.மேலும் இந்த வாரம் ஜித்தன் ரமேஷின் பிறந்தநாள் நேற்றைய பிக்பாஸில் போட்டியாளர்கள் கொண்டாடினர்.மேலும் பாலாஜிக்கும் வேல்முருகனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது.
செங்கோல் யார் கையில் இருக்கிறது என்பது முக்கியம்:Promo1
#BiggBossTamil இல் இன்று.. #Day20 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/MCUZFxK6pO
— Vijay Television (@vijaytelevision) October 24, 2020
இன்றைய முதல் பிரமோவில் கமலஹாசன் ” கொளுத்தி போடுறேன் கொளுத்தி போடுறேன் என்று சொன்னவர் கையிலேயே தற்போது வெடித்துவிட்டது.போட்டியாக இருக்க வேண்டியது, போடா வாடா என தரம் குறைந்துவிட்டது” என்று கூறுகிறார்.மேலும் செங்கோல் யார் கையில் இருக்கிறது என்பது முக்கியம், இருக்கிற நிலைமையா பார்த்தால் நாம் கையில் எடுக்கணும் போல இருக்கு என்று கமலஹாசன் குறிப்பிட்டிருந்தார். அதனால் கமலஹாசன் சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி பற்றி பேசப் போகிறார் என்று தெரிகிறது.
Promo 2:
இந்த வாரம் நடந்த அரச குடும்பமா அல்லது அரக்கு குடும்பமா என்ற டாஸ்க்கில் சனம் ஷெட்டியின் தலையில் சுரேஷ் சக்கரவர்த்தி கோலால் அடித்தார். அதன் காரணமாக சனம் ஷெட்டிக்கும் சுரேஷ் சக்கரத்திற்கும் இடையே பெரிய சண்டை நடந்தது.அதைப் பற்றி தான் கமலஹாசன் இன்று விவாதிப்பார் என்பது பிரமோவில் தெரிகிறது.
#BiggBossTamil இல் இன்று.. #Day20 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/d5Qb4GDSVx
— Vijay Television (@vijaytelevision) October 24, 2020