ரியோவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய போட்டியாளர்கள்:
பிக்பாஸ் சீசன் 4(Bigboss Season 4)இன்றைய ப்ரோமோ(Promo) முன்னதாக வெளியிடப்பட்டது. இதில் ஹவுஸ்மேட்(Housemate) அனைவரும் ஆரி(Aari) மற்றும் ரியோ வை (Rio)டார்கெட் செய்துள்ளதாக தெரிகிறது.
BigBoss Promo 1:
#BiggBossTamil இல் இன்று.. #Day14 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/foueYi0MzT
— Vijay Television (@vijaytelevision) October 18, 2020
பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக இரண்டு வாரங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.பிக்பாஸ் சீசன் 4(Bigboss Season 4)இல் ஹவுஸ்மேட் அனைவரும் தங்களது உண்மையான முகத்தை வெளியில் காட்டாமல் இருக்கிறார்கள் என்று தொடர்ந்து விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன. இதை கமலும் நேற்றைய நிகழ்ச்சியில் பதிவு செய்திருந்தார். ஸ்டார் விஜய்(Star Vijay) இன்று வெளியிட்ட 14 வது நாள் முதல் ப்ரோமோவில் கமல்ஹாசன் அவர்கள் போட்டி யாளர்களிடம் யார் மாஸ்க் போட்டு கொண்டிருக்கிறார்கள், யாரு முகத்தின் அழகு அகத்தில் தெரியும் படி நடமாடி கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லும்படி ஒரு டாஸ்க் ஐ கொடுக்கிறார்.
இதில் ஒவ்வொரு போட்டியாளரும் யார் முகமூடி அணிந்து இருக்கிறார்கள் என்பதை சொல்வதோடு அவர்களுக்கு ஒரு முகமூடி கொடுக்க வேண்டும்.
ஹவுஸ் மேட்டில் பெரும்பாலானவர்கள் ரியோ மற்றும் ஆரி இருவருக்கும் முகமூடி கொடுத்து இவர்கள்தான் தங்களது உண்மையான முகத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று கூறினார்கள்.அதிகம் பேர் ரியோவிற்கு முகமூடி(Mask) கொடுத்ததைப் பற்றி பேசிய கமல்ஹாசன் உங்களுக்கு அனைவரும் முகமூடி கொடுத்தது நியாயம் என்று நினைக்கிறீர்களா? எனக் கேட்கிறார், அதற்கு ரியோ நியாயம் இல்லை என்று கூறியதுடன் பிரமோ முடிவடைகிறது.
இன்று பிக்பாஸ் ஹவுஸ் லிருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார்(Elimination) என்பதால் இன்றைய பிக்பாஸில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
BigBoss Promo 2:
#BiggBossTamil இல் இன்று.. #Day14 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/F51dqRORiD
— Vijay Television (@vijaytelevision) October 18, 2020