Skip to content

Best food for winter season in India

food for winter season

மழைக்காலத்தில் winter season உடலில் பல்வேறு வியாதிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ள  குளிர்காலத்தில் இயற்கை அளித்துள்ள  பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் நோய்த் தொற்று எதுவும் ஏற்படாமல் உடலை பாதுகாக்க முடியும்.

food for winter season

Food for winter season

நிறைய பழங்கள் சாப்பிட வேண்டும். இதனால் நம் உடலில் எனர்ஜி அதிகமாவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

 

ஆப்பிள், மாம்பழம், பேரிக்காய், மாதுளை  ஆகிய பழங்களை மழைக்காலத்தில் சாப்பிடுவது நல்லது. இந்தப் பழங்களை சாப்பிட்டால் சளி பிடிக்காது.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 

மழைக்காலத்தில் winter season  தர்பூசணியும் கிர்னி பழமும் கடைகளில் கிடைத்தாலும் சாப்பிட கூடாது. ஏனெனில் இந்த பழங்கள் மிகவும் குளிர்ச்சியானவை. இதனால் சளி  பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

 

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பில்லாத உணவை சாப்பிட வேண்டும். மழைக்காலத்தில் மற்ற சமயங்களை விட இன்னும் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

 

சிவப்பரிசி, ஓட்ஸ், பார்லி தண்ணீர் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சமையலில் வெள்ளைப்பூண்டை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

கசப்பு உணவுகள் அதாவது பாகற்காய், வேப்பிலை கொழுந்து, மஞ்சள், வெந்தயம் ஆகியவை உணவில் இருப்பது அவசியம்.இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு நோய்த்தொற்று ஏற்படாமலும் உடலைப் பாதுகாக்கும்.

 

மழைக்காலத்தில் முக அலர்ஜி அதிகமாக இருக்கும். இதனால் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

 

புளிப்பு சுவையை முடிந்த அளவு மழைக்காலத்தில் குறைத்துக்கொள்ளவேண்டும்.

 

மழைக்காலத்தில் அசைவம் வேண்டாம். அதிலும் மட்டன், ஹெவியான சதைப்பற்றுள்ள மீன் வகைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

 

மழைக்காலத்தில் டீ காபியை தவிர்த்து ஹெர்பல் டீ குடிக்கலாம்.

 

மழைக்காலத்தில் இஞ்சி, புதினா, தேன் ஆகியவற்றை  அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.

 

சாலட்களை பச்சையாக சாப்பிடாமல் மசாலா சேர்க்காமல் வேகவைத்து சாப்பிட வேண்டும்.

 

சீசனல் பழங்களான ஆப்பிள், மாதுளை, வாழைப்பழம் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.  அதிலும் வாழைப்பழம் மழைக்காலத்திற்கு மிகவும் சிறந்தது.

 

மூட்டுவலி உடையவர்கள் வார்ம் வாட்டரில் துளசி சேர்த்து குடிக்கலாம்.

 

பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பட்டையை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் மூட்டுகளின்    இறுக்கம் குறையும்.

 

வெந்நீரில் துளசி இலைகளை போட்டு முகத்திற்கு ஆவி பிடிக்க வேண்டும்.

 

இதன் மூலம் சளி இருமல் இருந்தாலும் சரியாகிவிடும்.

 

தண்ணீரில் இஞ்சி, பூண்டு,   மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு காய்ச்சி தினமும் ஒரு  கப் குடித்து வந்தால் ஆஸ்துமா பிரச்சினை சரியாகும்.

 

விட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள், கொய்யா, பசலைக்கீரை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் சளி பிடிக்காது.

 

காய்ந்த பெரிய நெல்லிக்காய் மற்றும்  சீரகம் 50 கிராம் அதனுடன் 21 மிளகு சேர்த்து பவுடர் செய்து வைத்து இதிலிருந்து 5 கிராம் எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி பிடிக்காது.

 

மழைக் காலத்தில் winter season ஏற்படும் ஜீரணக் கோளாறு பிரச்சினையை சரி செய்ய இஞ்சி சாறை எலுமிச்சை ஜூஸ் உடன் கலந்து குடிக்கலாம்.

 

புதினா, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை எலுமிச்சையோடு சேர்த்தும் குடித்துவர ஜீரணக் கோளாறு சரியாகும்.

 

மழைக்காலத்தில் winter season இஞ்சியை சமையலில் அதிகம் சேர்ப்பது சிறந்தது.

food for winter season

 

ஒரு ஒரு கப் தண்ணீரில்  ஒரு கைப்பிடியளவு துளசி இலை ஒரு டீஸ்பூன் மிளகு சேர்த்து அது அரை டம்ளர் ஆகும் வரை காய்ச்சி அதனுடன் தேன் சேர்த்து குடித்து வர சளி பிரச்சினை சரியாகும்.

 

கற்பூரத்தைலம் அல்லது துளசி சேர்த்த முகத்திற்கு  ஆவியும் பிடிக்கலாம்.

 

தொண்டை வலிக்கு  காய்ச்சிய  சுடு தண்ணீரில்உப்பு போட்டு வாய் கொப்பளித்து வர தொண்டை வலி சரியாகும்.

 

குளிர்காலத்தில் மூட்டுகள் இருக்கமாக இருக்கும். அதற்கு தினமும்  warm-up பயிற்சிகள் செய்ய வேண்டும். பால் பொருட்கள், கோதுமை, மாமிசம், உருளைக்கிழங்கு, ஆல்கஹால் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

 

இரண்டு ஸ்பூன்  பட்டை  பவுடரை தேன் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

 

மேற்சொன்ன குறிப்புகளை பயன்படுத்தி மழைக்காலத்தில் நோய் வராமல் பாதுகாக்கலாம்

Leave a Reply

Your email address will not be published.