Table of Contents
நுரையீரலை பலப்படுத்தும் உணவுகள்:
நமது உடலின் பாகங்கள் ஒழுங்காக செயல்பட நுரையீரல் மிக அவசியமான ஒன்று. நுரையீரலை பலப்படுத்தும் உணவுகளை(Foods For Lungs)சாப்பிடுவதன் மூலம் நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கலாம். இதன் காரணமாக சுவாசப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.நுரையீரலை பலப்படுத்தும் உணவுகள் பற்றி பார்க்கலாம்.
1. கிரீன் டீ (Green tea):
கிரீன் டீயில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் இருப்பதால் அவை நுரையீரலில் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க உதவும்.
2. மத்தி மற்றும் கானாங்கெளுத்தி மீன்:
மத்தி மற்றும் கானாங்கெளுத்தி மீன்களில் உள்ள omega 3 fatty acid உடலில் ஏற்படும் நுரையீரல்(Lungs) நோய் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும்.
3. இஞ்சி (Ginger):
இஞ்சி நுரையீரலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கு உதவும். மேலும் இஞ்சி சுவாச பாதைகளை சீராக்கி நுரையீரல் ஆரோக்கியமாக செயல்பட உதவும்.
4. பிரக்கோலி (Broccoli):
பிரக்கோலி யிலுள்ள சல்போராபேன் நுரையீரலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் நுரையீரலில்(Lungs) ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க பெரிதும் உதவும்.நுரையீரலில் காற்று ஓட்டத்தை மேம்படுத்தவும் பிரக்கோலி பெரிதும் உதவும்.
5. ஆப்பிள் (Apple):
ஆப்பிளில் உள்ள பினோலிக் மற்றும் பிளேவனாய்டுகள் நுரையீரலில் காற்று பாதையில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்ய உதவும்.
6. பூண்டு (Garlic):
பூண்டில் உள்ள பிளேவனாய்டுகள் உடலிலுள்ள நச்சுக்களை அகற்ற பெரிதும் உதவும். இதன் காரணமாக நுரையீரல் செயல்பாடு மேம்படும்.
-
ஆலிவ் ஆயில் (Olive oil):
ஆலிவ் ஆயிலில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், விட்டமின் இ மற்றும் விட்டமின் கே போன்ற சத்துக்கள் உள்ளன. அவை நுரையீரலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கவும், நுரையீரலில் ஏற்படும் திசு சேதத்தை தடுக்கவும் பெரிதும் உதவும்.
-
மஞ்சள் (Turmeric):
மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் அலர்ஜி எதிர்ப்பு தன்மை தொற்றுநோய்களை எதிர்த்து போராட பெரிதும் உதவும்.
9. மிளகாய் (Chilli):
மிளகாயில் உள்ள காம்ப்சைசின் என்னும் பொருள் தான் மிளகாய் காரமாகவும், சூடாகவும் இருக்க காரணம்.மிளகாயில் உள்ள காம்ப்சைசின் சுவாச குழாயில் உள்ள சளியை நீக்க உதவுகிறது. மேலும் சளிச்சவ்வு களைப் பாதுகாக்க மிளகாய் உதவுகிறது.
10. நட்ஸ் மற்றும் விதைகள்(Nuts and Seeds):
நட்ஸ் மற்றும் விதைகள் நுரையீரலுக்கு(Lungs) ஆரோக்கியத்தைத் தரக்கூடிய உணவாகும். பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா மற்றும் பூசணி விதைகள், ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள் ஆகியவை நமது உடலுக்கு தேவையான மெக்னீசியத்தை தருகின்றன. இது நமது சுவாச பாதைகளில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்ய உதவும்.
-
பீட்ரூட் (Beetroot):
பீட்ரூட்டில் உள்ள பைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் சேர்மங்கள் நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்த பெரிதும் உதவும். பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் சத்துக்கள் நமது உடலில் ரத்த நாளங்களை விரிவுபடுத்துவதற்கும், ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும், ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதற்கும் பெரிதும் உதவும்.
12. முழு தானியங்கள்:
உணவில் பிரவுன் ரைஸ், முழு கோதுமை போன்ற தானிய உணவுகளை அதிக அளவில் சேர்க்க வேண்டும். இந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நுரையீரலில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். இவை சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவும்.
மேலே குறிப்பிட்ட இந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நுரையீரலை பலப்படுத்த முடியும்.