Skip to content

Benefits of Wooden Comb

Benefits of Wooden Comb

மர சீப்பு (Wooden comb):

ஒருவரின் அழகை தீர்மானிப்பதில் கூந்தலுக்கு(Hair) முக்கிய பங்கு உண்டு.முடி உதிர்வு, நுனி முடி உதிர்வு, இளநரை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தலைமுடி பராமரிப்பில்  சீப்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.மரத்தால் செய்யப்பட்ட சீப்பை பயன்படுத்துவது தலைமுடி  பராமரிப்புக்கு மிகவும் அவசியமான ஒன்று. மரத்தால் செய்யப்பட்ட சீப்பு  தலைமுடியின் பாதுகாப்பை அதிகரிக்கச் செய்யும். பிளாஸ்டிக்  சீப்பை விட மரச் சீப்பு தலைமுடிக்கு சிறந்த பலனைத் தரும்.

Benefits of Wooden Comb

மர சீப்பு பயன்கள் (Benefits of Wooden Comb):

உச்சந்தலையில் இரத்தஓட்டத்தை சீராக வைத்திருக்க மர சீப்பு உதவியாக இருக்கும். உச்சந்தலையில் இரத்தஓட்டம் சீராக இருந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.மர சீப்பால் தலை சீவும்போது உச்சந்தலையில் இருக்கும் ரத்த ஓட்டம் சீராகி தலைக்கு மசாஜ் செய்து போன்ற உணர்வு ஏற்படும்.இதன் காரணமாக முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.மேலும் முடி அடர்த்தியாக வளரவும் செய்யும்.மர சீப்பால் தலை சீவும் போது முடியில் சிக்கு  ஏற்படாது.மற்ற சீப்புகளை பயன்படுத்தும்போது தலை முடியில் சிக்கு ஏற்படும்.மர சீப்புகள்  நுனி முடி உடையாமல்  தலையை  சீவ உதவுகிறது. இதன் காரணமாக முடி உதிர்வு குறையும்.மர சீப்பின் பற்கள் கூர்மையாக  இல்லாமல் வட்ட வடிவில் இருப்பதால்  கூந்தலில்(Hair) எண்ணெய் அனைத்து இடங்களிலும் படுகிறது.இதன் காரணமாக பொடுகு பிரச்சனை ஏற்படாது.தலையில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற  மரச் சீப்பு பெரிதும் உதவும்.அனைத்து வகை  தலைமுடிகளுக்கும் மர சீப்பு ஏற்றது.வறண்ட கூந்தல் மற்றும் எண்ணெய்பசை இருக்கும் கூந்தலுக்கும் மரச் சீப்பு ஏற்றது.மர சீப்புகள் வலுவாக இருக்கும்.மர சீப்பு(Wooden Comb) நீண்ட நாட்கள் உழைக்கும்.மரச்  சீப்பின் பற்கள் எளிதில் உடையாது.மரச் சீப்பை சுத்தம் செய்வது  எளிது.

Benefits of Wooden Comb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *