Skip to content

Benefits Of sprouts In Tamil

Benefits Of sprouts In Tamil

பயிறு வகைகளை முளைகட்டி(sprouts )உண்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். முதலில் முளைகட்டுதல் என்றால் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

முளைக்கட்டுதல்

முளை கட்டுதல் என்பது  பயறுகளை  ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, நீரை வடிகட்டி, ஊறிய பயறுகளை ஒரு பருத்தி துணியில் கட்டி வைக்க வேண்டும் அல்லது ஒரு பாத்திரத்தில்  ஊறிய பயறுகளை வைத்து ஒரு தட்டு வைத்து மூடி வைக்க வேண்டும். முளையானது 6 to 8 மணி நேரத்திற்குள்  தோன்றும்.

முளை கட்டுவதால் ஏற்படும் பயன்கள்

முளை கட்டுவதால் உயிர்ச்சத்து கிடைக்கின்றது. 100 கிராம் பயிரில் 7 முதல் 20 மில்லிகிராம் உயிர் சத்து கிடைக்கின்றது. ரைபோபிளேவின், நியாசின், கோலின் மற்றும் பயோட்டின் அளவுகள் அதிகரிக்கின்றன. மாவுச் சத்தானது சர்க்கரைப் பொருளாக மாற்றப்படுகிறது.   கூட்டு நிலைமையில் இருக்கும் கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம் போன்ற தாதுக்கள் வெளியிடப்படுகின்றன. முளைக்கட்டிய பயிர்களை சமைக்காமல் உண்ணலாம். ஏனெனில்  முளை கட்டுதலினால்  பயிரின் சுவை மற்றும் தன்மை கூட்டப்படுகிறது.

இயற்கை உணவான  தானியங்களில்  புரதச்சத்தும், ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளது. பயிர் வகைகளை முளை கட்டுவதால்(sprouts ) செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும் பைரேட்ஸ் என்ற சத்து குறைக்கப்படும், சிக்கலான  ஸ்டார்ச்  உடைக்கப்பட்டு எளிதில் செரிமானம் ஆகிவிடும். பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிக அளவில் விட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் தேவையான கொழுப்பு ஆகியவை உள்ளன. இது எடையை குறைக்கவும், செரிமானத்தை சீராக்க உதவுகிறது. உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதில் முளைக்கட்டிய தானியங்கள்  முக்கிய பங்கு வகிக்கின்றன.

Benefits Of sprouts In Tamil

முளைக்கட்டிய தானியங்களில்(sprouts ) சாதாரண தானியங்களில் உள்ளதை விட 20 மடங்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக விட்டமின் ஏ, விட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ,  விட்டமின் பி காம்ப்ளக்ஸ்   ஆகியவை அதிகரிக்கின்றன. தொடர்ந்து சரி விகிதமான உணவை சாப்பிட முடியாத காரணத்தால்   கொழுப்பை எரிக்க கூடிய அமினோ அமிலங்கள் போதியளவு உற்பத்தி ஆகாமல் இருப்பது இன்று பலரும் எதிர்கொள்ளும் உடல் ரீதியான பிரச்சினையாகும். முளைக்கட்டிய தானியங்களை உட்கொள்வதால் உடலுக்கு அவசியமான அமினோ அமிலங்களை போதிய அளவில் சுரக்கச் செய்யும். காய்கறிகள் ,பழங்கள் போன்றவற்றில் சில அந்தந்த சீசன்களில் தான் கிடைக்கும். ஆனால் தானியங்கள் அப்படியல்ல ,அத்துடன் இந்த முளைக்கட்டிய பயிரை வீட்டிலேயே எளிதாக தயாரித்து விடலாம். அதிக செலவு ஏற்படாது.

சாப்பிட உகந்த நேரம்

ஒரு நாளைக்கு ஒருவேளை முளைக்கட்டிய தானியங்களை எடுத்துக்கொள்ளலாம். பாதி உணவும், பாதி முளை கட்டிய தானியங்களும்  இருக்குமாறு சாப்பிட்டால் நல்லது. முளைக்கட்டிய தானியங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது, காலை உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.   தானியங்கள் மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் முளைக்கட்டிய தானியங்களை வேக வைத்து சாப்பிடலாம். எந்த வேளையும்  இந்த முளைக்கட்டிய தானியங்களை மட்டும் உணவாகச் சாப்பிட கூடாது. இதில் பல்வேறு சத்துக்கள் நிறைந்து இருந்தாலும் நம் உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட், மினரல்ஸ் போன்ற சத்துகளும் தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சில சமயங்களில் முளைக்கட்டிய தானியங்கள் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வேகவைக்காமல் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். முளைக்கட்ட சுத்தமான நீரை பயன்படுத்துங்கள். கடைகளில்  ரெடிமேடாக கிடைக்கும்   முளைக்கட்டிய தானியங்கள் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். அதைப்போல தினமும் ஒரு வகை  தானியங்களை எடுப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு  தானியங்களை  எடுக்கலாம்.

முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • முளைகட்டிய தானியங்களை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • சரும  பளபளப்பை அதிகரிக்க முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடலாம்.
  • மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்ய முளைக்கட்டிய தானியங்கள் உதவும்.
  • குடல் ஆரோக்கியத்திற்கு  முளைக்கட்டிய தானியங்கள் பெரிதும் உதவும்.
  • முளைகட்டிய  பச்சை பயிரில் அதிகமான அளவில் அமினோ அமிலங்கள் மற்றும் பாலிஃபீனால்கள் உள்ளன. இவை உடலில்  புற்றுநோய் செல்கள் வராமல் தடுக்கிறது. முளைக்கட்டிய பயிர்களை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் வராமல் தடுக்கலாம்.
  • உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருப்பவர்கள் முளைக்கட்டிய பயிர்களை சாப்பிடுவதால் மிகவும் நல்லது.
  • முளைக்கட்டிய பயிர்கள்  ரத்த அழுத்தத்தையும்,  கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள் வைக்க   உதவும்.
  • முளைக்கட்டிய பயிர்கள் கல்லீரல் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *