வெயில் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்கும் பன்னீர் ரோஜா:
பன்னீர் ரோஜாவில்(paneer rose) இருக்கும் விட்டமின் சி சருமத்துக்கு அழகையும் பாதுகாப்பையும் தரக்கூடியது.முகத்திற்கு மென்மையும் பொலிவும் தருவதோடு சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கக்கூடியது பன்னீர் ரோஜா.
ரோஜா இதழ்களை அரைத்து தடவினால் சருமம் மென்மையாக மாறும்.குளியல் பொடி உடன் அரைத்த ரோஜா இதழ்களை சேர்த்து பயன்படுத்தலாம்.
வெயில் காரணமாக சருமம் பளபளப்பை இழந்து முகப் பருக்கள் தோன்றுகின்றன. இந்த பிரச்சனையை சரி செய்ய பன்னீர் ரோஜா இதழ்கள் மற்றும் கற்றாழை ஜெல் ஆகிய இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து முகத்தில் தடவலாம். 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவ வேண்டும்.இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் மறையும்.
அரைத்த பன்னீர் ரோஜா,ஒரு ஸ்பூன் தேன் இரண்டையும் சேர்த்து உதட்டின் மேல் தடவி வந்தால் உதட்டின் நிறம் மேம்படும்.
அரைத்த பன்னீர் ரோஜா இதழ்கள் மற்றும் தயிர் ஆகிய இரண்டையும் முகத்தில் தடவி வந்தால் முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
வெயில் காலத்தில் முகத்தில் திட்டு திட்டாக தோன்றும் கரும்புள்ளிகளை சரி செய்ய பன்னீர் ரோஜா இதழ்கள்,தாமரை இதழ்கள், கடலை மாவு,சிறிதளவு காய்ச்சாத பால் ஆகியவற்றை நன்றாக அரைத்து முகத்தில் தடவிவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வியர்வை நாற்றம் உள்ளவர்கள் பன்னீர் ரோஜாவிலிருந்து தயாரிக்கப்படும் பன்னீரை கலந்து குளித்துவந்தால் வியர்வை நாற்றம் நீங்கி உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
நாட்டு பன்னீர் ரோஸ் வகை(paneer rose) மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். ஹைபிரிட்(Hybrid) ரோஸ் வகைகளை பயன்படுத்த கூடாது.