Skip to content

Health Benefits Of Karpooravalli In Tamil

Benefits Of Karpooravalli In Tamil

இருமல், சளியை விரட்டும்  கற்பூரவள்ளி:

இருமல்,  சளி  போன்ற  நோய்களுக்கு கற்பூரவள்ளி(Karpooravalli)  முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. கற்பூரவள்ளி அதிகளவு மருத்துவ பயன்களை கொண்டது.   கற்பூரவள்ளி மூலிகை எளிதாக கிடைக்கக்கூடியது. கற்பூரவள்ளி மூலிகைச் செடி எல்லா காலங்களிலும் செழித்து வளரும்  தன்மை கொண்டது.

கற்பூரவள்ளியின் பயன்கள்:

கற்பூரவல்லி இலைகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.

குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் ஏற்பட்டால் கற்பூரவல்லி(Karpooravalli)  இலைச் சாற்றுடன் சிறிது கற்கண்டு கலந்து கொடுக்கலாம்.

கற்பூரவள்ளி இலையை எண்ணெயில்  பொரித்து அந்த  எண்ணெயை தொண்டையில் தடவிவந்தால்  காய்ச்சல் மற்றும் தொண்டை வலி குணமாகும்.

கொதிக்கும் நீரில் கற்பூரவல்லி இலைச் சாற்றை சேர்த்து ஆவி பிடித்து வந்தால் இருமல் மற்றும் சளி குணமாகும்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் கற்பூரவல்லி(Karpooravalli)  இலைச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிடலாம். மேலும் கற்கண்டு சேர்த்தும் இலையை மென்று சாப்பிடலாம்.

கற்பூரவள்ளி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் மூட்டுவலி படிப்படியாக குறையும்.

சிறுநீர் சம்பந்தமான நோய்கள் சரியாக கற்பூரவள்ளி இலை உதவும்.

பல் சிதைவு, ஈறுகள் பிரச்சனை, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கும் கற்பூரவள்ளி பெரிதும் பயன்படும்.

குழந்தைகளுக்கு  வயிற்றில் இருக்கும் பூச்சிகள் வெளியேற ஒரு ஸ்பூன்  கற்பூரவல்லி இலைச் சாற்றுடன் தேன் கலந்து கொடுக்கலாம். இந்த சாற்றை குடித்த அரை மணி நேரம் வரை வேறு எதையும் சாப்பிடக் கொடுக்கக் கூடாது.

கற்பூரவள்ளி இலைகளை வீட்டில் பரப்பி வைத்தால் கொசுக்கள் வராது.

கற்பூரவல்லி இலைகள்  தொற்றுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.

 

Leave a Reply

Your email address will not be published.