Skip to content

Benefits of Eating Raw Coconut in Tamil

Benefits of Eating Raw Coconut in Tamil

தினமும் ஒரு துண்டு தேங்காயை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

தேங்காயில்(Coconut) கால்சியம், மாவுச்சத்து, புரதச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, விட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், தாது பொருட்கள், நார்ச்சத்து அதில் சத்துக்கள் அடங்கியுள்ளன.

தேங்காய்(Coconut) என்றால் அதில் அதிக கொழுப்பு இருக்கும் என்று பலரும் அதை ஒதுக்கி விடுகின்றனர். ஆனால் தேங்காய் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. தேங்காயில் நம் உடலுக்கு நன்மை செய்யும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தேங்காயில் பூஞ்சைகளை எதிர்க்கும் ஆற்றலும், பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் தன்மையும் கொண்டிருப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.தேங்காய் பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும்

நமது உடலில் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆற்றல் தேங்காய்க்கு உண்டு.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த

தேங்காயில்(Coconut) நிறைய கொழுப்பு இருக்கிறது என்று சொல்வது உண்மைதான். ஆனால் கொழுப்பில் எல்.டி.எல்(LDL) மற்றும் எச்.டி.எல்  (HDL) என்ற இரண்டு வகைகள் உள்ளன. ஆனல் தேங்காயில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு நிறைந்துள்ளது. தேங்காயில் இருக்கும் நல்ல கொழுப்பு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை நீக்குகிறது. உடலிலுள்ள கொழுப்பின் அளவை பராமரிக்கவும் தேங்காய் பெரிதும் உதவுகிறது. கொழுப்பின் அளவை பராமரிப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் தேங்காயை பச்சையாக சாப்பிடும்போது உடலில் நல்ல கொழுப்பாக சேர்கிறது. ஆனால் தேங்காய் சமைக்கின்றோம் என்று சூடுபடுத்தும் போது தேங்காயில் உள்ள கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

கூந்தல் வளர்ச்சியில்

தேங்காய் பாலும், தேங்காய் எண்ணெயும் கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் எண்ணெய் தலைக்கு தடவி குளிக்கலாம். மேலும் தேங்காய் பாலை வாரத்திற்கு ஒரு முறை தலைக்குத் தேய்த்துக் குளித்துவர கூந்தல் அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் வளரும்.

நோய் எதிர்ப்பு சக்தி

தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் மற்றும் காப்ரிக் அமிலம் வைரஸ் மற்றும் பாக்டீரியா நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டவை. தேங்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் உள்ளது.

சரும ஆரோக்கியத்திற்கு

சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. முகப்பருக்கள், தழும்புகள், முகச் சுருக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க தேங்காய் பெரிதும் உதவும். அதனால் தேங்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

செல்களின் வளர்ச்சிக்கு

தலை முதல் கால் வரை உள்ள பகுதிகள் மற்றும் உடல் உள்ளுறுப்புகளை புத்துணர்ச்சியோடு வைக்க தேங்காய் பெரிதும் பயன்படும். உடலை வலுப்படுத்தவும் தேங்காய் பெரிதும் உதவும். உடலின் செல் வளர்ச்சிக்கு தேங்காய் பெரிதும் உதவும். உடலில் புதிய செல்களை தோற்றுவிக்கும் தன்மை தேங்காய்க்கு உண்டு.

தாய்ப்பாலுக்கு நிகர்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தாராளமாக தேங்காயை பச்சையாக உணவில் எடுத்துக் கொள்ளலாம். காலையில் பால், டீ, காபிக்கு பதிலாக தேங்காய் பால் குடிக்கலாம். நாட்டு சர்க்கரை, கருப்பட்டி, தேன் இவற்றில் ஏதேனும் ஒன்றை தேங்காய் பாலுடன் கலந்து குடிக்கலாம். தேங்காய் பால் குடிப்பதால் நாள் முழுவதற்குமான ஆற்றல் கிடைக்கும். தேங்காய் பால் தாய்ப்பாலுக்கு நிகரான சத்து கொண்டது என்று பெரியோர் கூறுவர். தாய்ப்பாலில் உள்ள மோனோலாரின் என்ற சக்தி தாய்ப்பால் அடுத்ததாக தேங்காய் பாலில் உள்ளது.

கெட்ட கொழுப்பை கரைக்க

தேங்காயில் உள்ள ஃபேட்டி ஆசிட் உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைக்க பெரிதும் உதவும்.

தீப்புண்

தேங்காய் எண்ணெய்யை தீப்புண்கள் மீது தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் ஆறும். தேமல், சிரங்கு, படை போன்ற நோய்களுக்கு தயாரிக்கப்படும் மருந்தில் தேங்காய் எண்ணெய் அதிகளவு சேர்க்கப்படுகிறது.

மாதவிடாய்

மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப் போக்குக்கு தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளைப்படுதலுக்கு தென்னம்பூ மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

தோல் வியாதிகளை குணப்படுத்த

தேங்காய் சிரட்டையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் தோல் வியாதிகளை குணப்படுத்த பெரிதும் உதவுகிறது.

தேங்காய் எண்ணெய்

தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், நாள்பட்ட தீராத புண்களுக்கு தரப்படும் மத்தம் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்கு பயன்படுத்தப்படும் நீலிபிருங்காதி தைலம், சொரியாசிஸ் நோய்க்கு பயன்படுத்தப்படும் வெப்பாலை தைலம், தலையில் உள்ள பொடுகு பயன்படுத்தப்படும் பொடுதலை தைலம் ஆகிய தலங்களில் தேங்காய் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.

வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க

தேங்காய் பாலை விளக்க எண்ணெயோடு கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்.

அமிலத்தன்மை சரி செய்ய

அதிக அமிலத்தன்மை காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களை சரிசெய்ய தேங்காய்ப்பால் பெரிதும் உதவும்.

தைராய்டு

தைராய்டு சுரப்பிகளின் செயல்பாட்டை பாதுகாக்க தேங்காய் பெரிதும் உதவும்.

என்றும் இளமையுடன் இருக்க

தேங்காயில் உள்ள விட்டமின் சி முதுமையை தடுத்திட பெரிதும் உதவும்.

உடல் எடையை குறைக்க

தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் மற்றும் காப்ரிக் அமிலம் உடல் எடையை குறைக்க பெரிதும் பயன்படும்.

Leave a Reply

Your email address will not be published.