Skip to content

Benefits of Drinking Water From Copper Vessel in Tamil

Benefits of Drinking Water From Copper Vessel in Tamil

செம்பு பாத்திரத்தில் தண்ணீர்:

செம்பு பாத்திரத்தில்(Copper Vessel) தண்ணீர் குடிப்பதை நம் முன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். செம்பு பாத்திரத்தில் உள்ள தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் வாயு ,கபம், பித்தம் ஆகியவை மூன்றும் சமநிலையில் இருக்கும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அல்லது உணவை சமைப்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும். செம்பு  நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் தரக்கூடியது. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கும் போது செம்பு தாது  மெல்ல மெல்ல கரைந்து, செம்பு பாத்திரத்தில் உள்ள தண்ணீரை சத்துக்கள்  நிறைந்ததாக மாற்றுகிறது. செம்பு பாத்திரத்தில் தண்ணீரை இரவு ஊற்றி வைத்து மறுநாள்  காலையில் தண்ணீரை குடிக்கும் போது அந்த தண்ணீரானது சத்துக்கள் நிறைந்ததாக மாறிவிடும்.

Benefits of Drinking Water From Copper Vessel in Tamil

எங்கள் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கும் தயாரிப்புகளை நாங்கள் சேர்க்கிறோம். இந்தப் பக்கத்தில் உள்ள இணைப்புகள் மூலம் நீங்கள் வாங்கினால், நாங்கள் ஒரு சிறிய கமிஷனைப் பெறலாம்.

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால்  கிடைக்கும்நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:

உடலில் காப்பர் சத்து குறைவாக இருந்தால்  ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறையும்  என்று ஆய்வுகள் கூறுகின்றன. காப்பர் சத்து எடுத்துக்கொள்ளுதல் மூலமாக உடலில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ளலாம். அடிக்கடி காய்ச்சல் ஏற்படும்   நபருக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் காப்பர் சத்து மிகவும் அவசியமான ஒன்று. செப்புப் பாத்திரத்தில் உள்ள தண்ணீர் நோய் தொற்றுகளை தடுக்க உதவும். பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை செப்புப் பாத்திரம்(Copper Vessel) தண்ணீருக்கு உண்டு.

ரத்தத்தை சுத்திகரிக்க:

காப்பர் சத்து ரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. செம்பு பாத்திரத்தில் உள்ள தண்ணீரை குடிக்கும் போது ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

Benefits of Drinking Water From Copper Vessel in Tamil

முக அழகை பராமரிக்க:

செம்பு பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்  அதிக அளவில் உள்ளது. இந்த பாத்திரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்  முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்குகிறது.  முகத்தில் உள்ள சரும சுருக்கங்களை நீக்கி முகத்தை அழகாகவும் இளமையாகவும் வைக்க செப்புப் பாத்திரம் தண்ணீர்(Copper Vessel) பெரிதும் உதவும்.

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க:

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த காப்பர் பெரிதும் உதவும். காப்பர் பாத்திரத்தில் உள்ள தண்ணீரை குடிப்பதன் மூலம்  இதயம் சம்பந்தமான பிரச்சனைகள்  வராமல் தடுக்கலாம். காப்பர்  இதய எரிச்சல், அமிலத்தன்மை, சளி, இருமல் ஆகியவற்றை சரிசெய்ய உதவுவதாக ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. ரத்த அழுத்த பிரச்சனைகளை சரிசெய்ய காப்பர் பெரிதும் உதவும்.

எலும்புகள் பலம் பெற:

காப்பு சத்து உடலில் குறைவாக இருந்தால் எலும்புகள் பாதிப்படையும். எலும்புகள் பலம் பெற காப்பர் பாத்திரத்தில் உள்ள தண்ணீர் பெரிதும் உதவும்.

உடல் எடையை குறைக்க:

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் செம்பு பாத்திரத்தில் உள்ள  தண்ணீரை குடித்து வரலாம்.  உடலில் உள்ள கொழுப்பை குறைக்க காப்பர் பாத்திர தண்ணீர்  பெரிதும் உதவும்.

செரிமானத்தை மேம்படுத்த:

காப்பர் பாத்திரத்தில் உள்ள தண்ணீரை குடிக்கும் போது உடலில் செரிமானம் சீராக நடைபெறுகிறது. வயிற்றில் ஏற்படும் புண்கள், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய காப்பர் பெரிதும் உதவும்.  காப்பர் வயிற்றை சுத்தம் செய்வதோடு, கல்லீரல் மற்றும்  சிறுநீரக செயல்பாடுகளை  ஒழுங்குபடுத்தும்.

காயங்களை குணப்படுத்த:

காப்பர் பாத்திரத்தில் உள்ள தண்ணீர் வைரஸ் மற்றும்  பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளது. காயங்களை ஆற்றும் தன்மை  காப்பர் இல் உள்ளது. காப்பர் வெளிப்புற காயங்கள் மட்டுமல்லாது     உள் காயங்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

புற்றுநோய் வராமல் தடுக்க:

காப்பர் இல் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிக அளவில் உள்ளது. காப்பர் இல்உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்டிகள்  பிரீ ரடிகல்ஸ் எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. புற்றுநோய் வராமல் தடுக்க காப்பர் பெரிதும் உதவும்.

தைராய்டு:

உடலில் தைராய்டு சுரப்பியின்  செயல்பாட்டை  சீராக காப்பர் பெரிதும் உதவும். தைராய்டு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயல்பாகவே  காப்பர் சுரப்பது குறைவாக இருக்கும். அதனால் காப்பர் பாத்திரத்தில் உள்ள தண்ணீரை குடிப்பது தைராய்டு இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.

ரத்தசோகை:

ரத்த சோகை ஏற்படாமல் தடுக்க காப்பர் பாத்திரத்தில் உள்ள தண்ணீரை குடிப்பது மிகவும் அவசியமான ஒன்று.

மெலனின் உற்பத்தி அதிகரிக்க:

சருமம், கூந்தல், கண்கள் ஆகியவற்றின்  நிறங்களுக்கு காரணம் மெலனின் என்னும் நிறமி ஆகும். மெலனின் உற்பத்தி அதிகரிக்க காப்பர் பெரிதும் உதவும்.

வாத பிரச்சினைகள்:

மூட்டுகள் மற்றும் வாதம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க காப்பர் பாத்திரத்தில் உள்ள தண்ணீர் பெரிதும் உதவும்.

நீரைக் குடிக்கும் முறை:

காப்பர் பாத்திரத்தில் உள்ள தண்ணீரை எவ்வாறு படிக்க வேண்டும் என்று பார்க்கலாம். காப்பர் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து 24 மணி நேரத்திற்கு பிறகு  குடிப்பது சிறந்த பலனைத் தரும்.

Benefits of Drinking Water From Copper Vessel in Tamil

செம்பு பாத்திரத்தை சுத்தம் செய்வது எப்படி?

செம்பு பாத்திரத்தை சோப்பு கொண்டு சுத்தம் செய்யக்கூடாது. செம்பு பாத்திரத்தை  புளியை கொண்டு சுத்தம் செய்யலாம். புளி இல் இருக்கும் அமிலத்தன்மை காப்பர் உடன் இணைந்து காப்பர் பாத்திரத்தை பளபளக்கச் செய்யும்.

Content disclaimer

Content on this website is provided for information purposes only.Tamilneithal.com is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts, or opinions appearing in the article do not reflect the views of Tamilneithal and Tamilneithal does not assume any responsibility or liability for the same

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *