தினமும் லெமன் ஜூஸ்(Lemon Juice) குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம். லெமன் ஜூஸ் குடிப்பது உடலுக்கு பல்வேறு வகைகளில் நன்மை தரக்கூடியது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
எலுமிச்சையில் உள்ள விட்டமின் சி நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்க உதவும்.
நெஞ்செரிச்சல்
மசாலா மற்றும் காரமான உணவுகளை சாப்பிடுவதால், நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் லெமன் ஜூஸ் குடிப்பது சிறந்த தீர்வளிக்கும்.
உணவுக்குழாயில் மற்றும் வயிற்றில் ஏற்படும் அதிகப்படியான அமில சுரப்பை கட்டுப்படுத்த லெமன் ஜூஸ்(Lemon Juice) பெரிதும் உதவும்.
சிறுநீரக கற்களை கரைக்க
தினமும் லெமன் ஜூஸை குடித்து வந்தால் சிறுநீரகத்தில் ஏற்பட்டிருக்கும் கற்கள் மெல்ல கரைந்து வெளியேறும். மேலும் சிறுநீரகத்தில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற லெமன் ஜூஸ் பெரிதும் உதவும்.
அஜீரணத்தை சரி செய்ய
அஜீரணம் காரணமாக வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி ஏற்பட்டால் லெமன் ஜூஸ் குடிப்பது சிறந்த தீர்வளிக்கும்.
வீக்கங்களை கட்டுப்படுத்த
உடலில் வீக்கம் உண்டாக்கும் வலியை கட்டுப்படுத்த லெமன் ஜூஸ்(Lemon Juice) பெரிதும் உதவும்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த
தினமும் லெமன் ஜூஸ் குடித்து வந்தால் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.
உடல் எடையை குறைக்க
லெமன் ஜூஸ் உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவும். எலுமிச்சையில் உள்ள பாலிஃபீனால்கள் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றன. அதனால் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் உடல் எடையை குறைக்கலாம்.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த
லெமன் ஜூஸில் ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிகளவில் இருக்கின்றன. நம் லெமன் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் வயதான தோற்றம் அடைவதை குறைக்கலாம்.
உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த லெமன் ஜூஸ் பெரிதும் உதவும். சரும கோடுகள், சரும வறட்சி, சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை சரி செய்ய லெமன் ஜூஸ் பெரிதும் உதவும்.