பீட்ரூட் (Beetroot) உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தரக்கூடியது. பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
1.ரத்தசோகை:
பீட்ரூட்டில் கீரைகளை விட அதிகளவில் இரும்புச்சத்து உள்ளது. மேலும் பீட்ரூட்டில் உள்ள போலேட் ரத்தசோகையை சரிசெய்ய உதவும். பீட்ரூட் உடலில் இரும்புச் சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்தசோகையை சரிசெய்ய உதவும்.
2.இரத்த அழுத்தம்:
பீட்ரூட்டில் (Beetroot) உள்ள நைட்ரேட்டுகள் ரத்த நாளங்கள் விரிவடைய உதவுகிறது. இதன் காரணமாக ரத்த ஓட்டம் சீரடைந்து ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
-
புற்றுநோய்:
பீட்ரூட்டில் உள்ள பீட்டா கரோட்டின் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது.
-
செரிமான கோளாறு:
பீட்ரூட்டில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்திற்கும் செரிமானத்திற்கும் பெரிதும் உதவுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய பீட்ரூட் பெரிதும் உதவும். மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவும் பீட்ரூட் பெரிதும் உதவும்.
5.நீரிழிவு:
பீட்ரூட்டில் உள்ள நார்ச்சத்து உடலிலுள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவும்.
-
உடலை சுத்தப்படுத்த:
உடலில் டாக்ஸின்கள் இருந்தால்,நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பீட்ரூட் உடலிலுள்ள டாக்ஸின்களை வெளியேற்ற பெரிதும் உதவும். உடலை சுத்தப்படுத்த விரும்புபவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம்.
-
மறதி:
முதுமையில் ஏற்படும் மறதி பிரச்சனையை சரி செய்ய பீட்ரூட் ஜூஸ் பெரிதும் உதவும்.
-
ஆற்றல் அதிகரிக்க:
பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும்.
-
கல்லீரலை பாதுகாக்க:
பீட்ரூட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரலை பாதுகாக்க உதவும். பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் பாதிக்கப்பட்ட கல்லீரலை சரி செய்யலாம்.
Recommended Articles:
Onion hair oil for Hair growth
Benefits of Aloevera For Hair growth
Best food for winter season in India
Amazing Health Benefits Of Honey
Figs: Nutrition and 15 amazing health Benefits
Top 10 Vegetables That Are High in Vitamin C
Amazing Benefits Of Nilavembu Kashayam